குயிண்டன் டிகாக் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு

செஞ்சூரியின், டிச. 31- இந்திய அணியுடனான தோல்வியை அடுத்து, தென் ஆப்ரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குயிண்டன் டிகாக் டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க விரும்புவதாகவும், ஒயிட் பால் கிரிக்கெட்டில் (ஒருநாள், டி20) கவனம் செலுத்த உள்ளதாகவும் அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார். அவரது ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.