குரங்கு காய்ச்சல் தடுப்பு தீவிரம்

பெங்களூர் : ஜூலை. 19 – நாட்டில் குரங்கு காய்ச்சல் புகார் உறுதியாயிருக்கும் நிலையில் கேரளாவின் கண்ணூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் வந்திருப்பதை தொடர்ந்து கேரளா மற்றும் கர்நாடகா மாநில எல்லை பகுதியில் கடும் எச்சரிக்கை வகிக்கப்படுகிறது. கேரளாவிலிருந்து மாநிலத்திற்கு வருபவர்கள் மீது கடும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொருவரும் சோதனைக்கு உட்படுத்த பட்டு வருகிறார்கள். கடந்த ஜூலை 13 அன்று துபாயிலிருந்து மங்களூரு வாயிலாக கண்ணூறுக்கு வந்த 31 வயது நபர் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இந்த நபர் மங்களூருக்கு வந்த பின்னர் கண்ணூறுக்கு சென்றிருந்த நிலையில் இவருடன் பயணித்து மங்களூருக்கு அதே விமானத்தில் இருந்த 30 பயணியரும் வீட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் .தவிர நோய் தொற்று கண்டுள்ள நபருடன் விமானத்தில் மொத்தம் 191 பயணிகள் இருந்ததுடன் அவர்களின் இருக்கைகளின் எண்களின் படி முன் பக்கம் இருந்த மூன்று இருக்கைகள் மற்றும் பின் பகுதி இருக்கைகளில் இருந்த 34 பயணியர் சோதனைக்கு உட்படுத்தப்படவேண்டிய நிலையில் இவர்களில் 10 பேர் மங்களூரில் , 15 பேர் கண்ணூறு மற்றும் 9 பேர் உடுப்பியை சேர்ந்தவர்கள் இவர்களில் 30 பேரை கண்டு பிடித்து 21 நாட்களை தங்களை தனிமை படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவிர மீதமுள்ள 4 பேரை கண்டுபிடிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. வீட்டு தனிமையில் உள்ள பயணியரின் உடல் நலத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதுடன் குரங்கு காய்ச்சல் அறிகுறி ஏதாவது தெரியப்பட்டால் அவர்களை மங்களூருவின் வென்லாக் மருத்துவமனையில் தனி வார்டுக்கு மாற்றப்படுவார்கள் என தக்ஷிண கன்னடா மாவட்ட அதிகாரி டாக்டர் ராஜேஷ் தெரிவித்தார். கேரளா நபரால் குரங்கு காய்ச்சல் தெரிய வந்திருப்பதால் கேரளாவிலிருந்து மங்களூருக்கு வருபவர்கள் மீது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதே வேளையில் கேரளா மற்றும் மைசூரு எல்லை பகுதியிலும் சோதனைகள் நடத்தக்ப்பட்டு வருகிறது. தினசரி எல்லை பகுதியிலிருந்து மாநிலத்திற்கு வரும் 250க்கும் மேற்பட்ட பேர் தற்போது சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். மைசூரின் ஹெச் டி கோட்டே தாலூகா அதிகாரி ரவிக்குமார் தலைமையில் இந்த சோதனைகள் நடந்து வருகின்றன. தவிர மங்களூரில் பந்தரு விமானநிலையத்தில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஆனாலும் கர்நாடக மாநிலத்தில் இன்று வரை குரங்கு காய்ச்சல் குறித்து எந்த புகாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது