குருபர் சமூகம் பிரம்மாண்ட பேரணி


பெங்களூர், பிப். 7- குருபர் சமுதாயத்தினர் தங்களை பழங்குடி உறுப்பினர் பிரிவில் சேர்க்க வலியுறுத்தி இன்று பிரம்மாண்டமான பேரணி நடத்தினர். இதனால் தும்கூர் சாலை போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது.
குரும்பர் சமுதாயத்தினர் பல்வேறு ஆண்டுகளாக தங்களை எஸ்டி எனும் பழங்குடி வகுப்பில் சேர்க்க தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். சமூக, கல்வி, பொருளாதார பிரச்சனைகளில் தங்கள் சமுதாயத்தினர் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதால் சமுதாய மேம்பாட்டுக்கு இட ஒதுக்கீடு வசதி அவசியம் தேவை என்பதால் தங்களை எஸ்.டி. பிரிவில் சேர்க்க வலியுறுத்தி இன்று குரும்பர் மாநாடு பெங்களூரின் புறநகர் மாதவரா என்ற இடத்தில் நடத்தப்பட்டது.
குருபர் சமுதாய மடாதிபதி நிரஞ்சனானந்தபுரி சுவாமிகள் பாதயாத்திரை நடத்தி வந்தார். இன்று மாநாட்டில் அவர் பங்கேற்றார்.
இம்மாநாட்டில் அமைச்சர்கள் கே. எஸ் .ஈஸ்வரப்பா, பைரத்தி பசவராஜ், எம் .டி. பி. நாகராஜ், ஆர். சங்கர், முன்னாள் அமைச்சர்
எஸ் விஸ்வநாத், ரேவண்ணா உட்பட குருபர் சமுதாய மடாதிபதிகள் என பலரும் இதில் பங்கேற்றனர். பெங்களூர் மாதவரா என்ற இடத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்க மாநிலம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் திரண்டு வந்தனர். இவர்களுக்கு காலை உணவாக ரொட்டி, தயிர் சாதம், பிஸிபேளாபாத், ஆகிய சிற்றுண்டிகள் வழங்கப்பட்டது.
தாரை தப்பட்டை முழங்க இளைஞர்கள் ஆட்டம் ஆடிவந்தனர். சமுதாயத்தினர் தங்களுக்கு எஸ்டி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தி வந்தனர்.