குற்றவாளிக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு

சிவமொக்கா : செப்டம்பர் . 3 – பிரேம் சிங்க் கத்தி அறுப்பின் முக்கிய குற்றவாளி ஜபீவுல்லாவின் தொடர்புகள் பயங்கரமாக இருப்பதுடன் தீவிரவாதிகளுடன் இவனுக்கு தொடர்புகள் இருப்பது தற்போது வெளியாகியுள்ளது. விரைவில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு துறை ( ஏன் டி ஏ ) வுக்கு மாற்றப்படும் என மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார். சிவமொக்கா முழுவதும் அமைதியாக உள்ளது. ஆங்காங்கு சில சம்பவங்கள் நடந்தாலும் நிலைமை கட்டுக்குள் உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு சில சம்பவங்கள் நடந்துள்ளன அவ்வளவே என அமைச்சர்த்தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் முருகாஸ்ரீ கைது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் அரசு எவ்விதத்திலும் தலையிடாது. தற்போது இது விசாரணை நிலையில் உள்ளதால் மேற்கொண்டு எதுவும் சொல்ல முடியாது. முருகா மடத்திற்கு தேவையான பாதுகாப்பு போடப்பட்டிருப்பதுடன் பாதுகாப்பிற்க்காக ஏழு கே எஸ் ஆர் பி பிரிவுகள் பணியிலமர்த்தப்பட்டுள்ளன. நம் மாநிலம் குறித்து பிரதமர் மோதிக்கு தனி அக்கறை உள்ளது. அவர் மாதத்திற்கு ஒரு முறை மாநிலத்தை விஜயம் செய்வதாக கூறியுள்ளார். தேர்தலுக்கு நாங்கள் தயாராயிருக்கிறோம். செப்டம்பர் 8 அன்று தொட்டபள்ளாபுராவில் ஜனோத்சவா நிகழ்ச்சி நடைபெறும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.