குற்றவாளி கைது

பெங்களூர் : மார்ச் 6 – வீடியோவில் கத்தை கதையாக பணம் காட்டி மோசடி செய்து வந்த பலே கில்லடியை கைது செய்வதில் சுப்பிரமணிய நகர் போலீசார் வெற்றியடைந்துள்ளனர். மோசடியாளன் கிஷன் என்ற மாகாளி கிஷன் ஆவான். குற்றவாளி வியாபார பெயரில் அறிமுகமில்லாத ஏமாறும் நபர்களுக்கு போன் செய்து லட்ச கணக்கில் பணங்கள் பெற்று மோசடி செய்துள்ளான். இவன் கத்தை கதையாய் பணத்தை வீடியோவில் காட்டி நீங்கள் அளிக்கும் பணத்திற்கு அதிக லாபம் ஈட்டி தருவதாக நம்ப வைத்து பொதுமக்களை தன வழியில் வீழ்த்தியுள்ளான் . பின்னர் அவர்களிடமிருந்து லட்சக்கணக்கில் பணங்கள் பெற்று மோசடி செய்து வந்துள்ளான். குண நிதி என்பவர்கள் என்னிடம் 15.15 லட்சம் முதலீடுசெய்து மோசடி செய்துள்ளதாக கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொண்ட சுப்ரமண்யபுரா போலீசார் குற்றவாளியை கைது செய்துள்ளனர். நண்பன் கெளதம் என்பவர் வாயிலாக குணநிதி என்பவருக்கு மோசடி செய்த குற்றவாளி அவருக்கு ஏற்கெனவே அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடன் வாங்கி பணம் கொடுக்கவும் அதை பிறருக்கு விநியோகித்து லாபம் ஈட்டி தருவேன் என நம்ப வைத்து கடனுக்காக ஏஜென்ட் வெங்கடேஷ் என்பவரை தொடர்பு கொள்ளுமாறும் கிஷன் தெரிவித்துள்ளான். இதே போல் வெங்கடேஷ் ஆவணங்கள் பெற்று வங்கி வாயிலாக கடன் வாங்கி கொடுத்துள்ளான்.
பின்னர் இந்த கடன் தொகை கிஷன் பெயருக்கு மாற்றலாகியுள்ளது. வங்கி மாதாந்திர தொகையயை தானே கட்டுவதாகவும் கிஷன் தெரிவித்திருந்தான். ஐந்தாறு தவணைகள் கட்டிய கிஷன் பின்னர் இதற்கின லாப தொகை தருவதாக தெரிவித்திருந்தான் .ஆனால் எவ்வித தொகையும் செலுத்தாமல் மோசடி செய்துள்ளான்.
கிஷன் இதே போல் நூற்று கணக்கானவர்களை ஏமாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது. இவன் சுமார் 80 முதல் 100 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. கிங்க் ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வரும் குற்றவாளி கிஷன் பணத்தை திருப்பி கேட்டாலே துப்பாக்கியை கட்டி மிரட்டி வந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
முதலீட்டாளர்கள் உயிர் பயத்தால் புகார் தெரிவிக்கவும் பயந்து வந்துள்ளனர். இதனால் தற்போது இவனிடம் பணத்தை இழந்தவர்கள் தைரியமாக வந்து புகார் தெரிவிக்குமாறு வடக்கு பிரிவு டி சி பி சைதூள் அதாமத தெரிவித்துள்ளார்.