குலசேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் – மோடி அடிக்கல் நாட்டினார்

தூத்துக்குடி : பிப்.28- தூத்துக்குடியில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் 36 திட்டங்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அவை பின்வருமாறு…
*கொச்சியில் நாட்டின் முதலாவது பசுமை ஹைட்ரஜன் செல் உள்நாட்டு நீர்வழிக் கப்பலை பிரதமர் தொடங்கி வைத்தார்.
*திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. குலசேகரப்பட்டினம் எவுதளம் ஆண்டிற்கு 24 ராக்கெட்டுகளை விண்ணிற்கு அனுப்பும் நிறனுடையது.
*தூத்துக்குடி துறைமுகத்தில் வெளிதுறைமுக சரக்கு பெட்டக முளையம் அமைக்க பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
*ரூ.124.32 கோடி மதிப்பீட்டில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
*ரூ.4,586 கோடி செலவில் முடிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி.
*ரூ.7,055 கோடியில் வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடியில் சரக்கு தளம் ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர்.
*மீன்சுருட்டி-சிதம்பரம் இருவழிப்பாதை, ஒட்டன்சத்திரம்- மடத்துக்குளம் 4வழிச்சாலையை தொடங்கிவைத்தார்.*நாகை-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை பிரிவின் இருவழிப் பாதை. ஜித்தண்டஹள்ளி-தருமபுரி 4வழிச்சாலை தொடங்கப்பட்டது.