குளத்தில் மூழ்கி 3 மகன்கள் சாவு


மாண்டியா., ஏபா 8-
மண்டியா மாவட்டம் பாண்டவபூர் தாலுகாவில் உள்ள பெல்லி அதிகுப்பே கிராமத்தில் விவசாய குளத்தில் நீச்சலடிக்க சென்ற மூன்று சிறுவர்கள் மூழ்கி பலியானார்கள். .
இறந்தவர்கள் சந்தன், கார்த்திக் மல்லிகார்ஜுனா என்று தெரியவந்துள்ளது. இவர்கள் மகாதேவப்பாவின் மகன்கள் என்று தெரியவந்துள்ளது
நண்பர்களுடன் நீந்த சென்ற போது இந்த துயர சம்பவம் ஏற்பட்டது. இறந்த பிள்ளைகளின் உடல்கள் குளத்தில் மிதப்பதை மகாதேவப்பா முதன் முதலில் கண்டு கதறி அழுதுள்ளார் அக்கம்பக்கத்து தோட்டங்களில் வேலை செய்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்