குளிக்க தண்ணீர் இன்றி நீண்ட வரிசைகளில் குடங்களுடன் காத்திருக்கும் பெண்கள்

பெங்களூர் : மார்ச் 7 – நகரில் வரலாறு காணாத தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் நிலத்தடி குழாய்களும் வற்றி உலர்ந்து போயுள்ளன. தற்போது மிக அதிக பணத்திற்கு விற்கப்படும் தண்ணீர் டேங்கர்களையே பொது மக்கள் நம்பியுள்ளனர் . இது குறித்து ராஜராஜேஸ்வரி நகரில் வசிப்பவர் ஒருவர் கூறுகையில் நாங்கள் தண்ணீருக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியுள்ளது. இப்பகுதியின் பட்டணகெரே முழுக்க தண்ணீர் பிரச்சனையை நீண்ட நாட்களாக உள்ளது. எங்களுடன் இதுவரை எந்த அதிகாரியும் இது குறித்து பேச வரவில்லை. ஒரு குடத்திற்கு மேல் எங்களுக்கு தண்ணீர் கொடுப்பதில்லை . தவிர எங்களுடன் குழந்தைகள் இருப்பதற்கும் டேங்கர் உரிமையாளர்கள் அனுமதிப்பதில்லை. நாங்கள் குடும்பத்தில் ஆறு பேர் உள்ளோம். எங்களுக்கு கிடைத்து வரும் தண்ணீர் போதவில்லை என்றாலும் நாங்கள் எப்படியோ சமாளிக்க வேண்டியுள்ளது. எனக்கு 71 வயதாகிறது . குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் முன்னர் நான் வரிசையில் நின்று தண்ணீர் பிடித்தாக வேண்டியுள்ளது. எங்களுக்கு குளிக்க தண்ணீர் இல்லை . மற்றும் கால்நடைகளுக்கும் குடிக்கவும் போதுமான தண்ணீர் கிடைக்க வில்லை. ஆறு பேர் கொண்ட எங்கள் குடும்பத்திற்கு வெறும் ஒரு குடம் தண்ணீர் மட்டுமே கிடைத்து வருகிறது. சமையலுக்கு மாநகாட்சி தண்ணீரை பயன்படுத்துகிறோம். அந்த தண்ணீரையே கொதிக்கவைத்து வடிகட்டி குடிக்க பயன் படுத்துகிறோம். கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. தினசரி நாங்கள் தண்ணீருக்காக குடிநீர் வாரிய அதிகாரிகளை தொடர்பு கொள்கிறோம். மாநகராட்சியின் ஆர் வோ மையத்திற்கு தினமும் குடிநீருக்காக வருகிறேன். அங்கும் ஒருவருக்கு ஒரு குடம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. அதற்கும் மணி நேரத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டும். முன்னர் 600 முதல் 1000 ரூபாய் வசூலித்த தனியார் டேங்கர்களும் இப்போது குறைந்தது 2000 ரூபாய் வசூலிக்கிறார்கள்.டேங்கர் விலையை குறைக்குமாறு அரசு அறிவுறுத்திய பின்னர் இந்த பகுதிக்கு டேங்கர்களே வருவதில்லை. தினசரி நான் அரசுக்கு இ மெயில் அனுப்பினும் எவ்வித பதிலும் இல்லை. இவ்வாறு பொதுஜனம் தன் குறைகளை புலம்பி தீர்த்தார்.