குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற தாய்

பாகேபள்ளி, மார்ச் 28:
ஆந்திர மாநிலம் சிலமத்தூர் அருகே உள்ள மார்க்கட்பள்ளியில் தனது 5 மகள்களுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நடந்துள்ளது.
பாகேபள்ளி தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின், விஷம் குடித்து உடல் நலம் பாதிக்கப்பட்ட 6 பேர், மேல் சிகிச்சைக்காக சிக்கபள்ளாப்பூர் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தாய் அனிதா, குழந்தைகள் லாவண்யா (11), தரணி (9), காவ்யா (8), ரக்ஷிதா (5), ஸ்ரீவள்ளி (2) ஆகியோர் விஷம் குடித்தனர். தாய் அனிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் ஐசியூவில் சிகிச்சை பெற்று வருகிறார். அனிதா கர்ப்பமாக இருப்பதாகவும், கணவர் கோபால் தொல்லையால் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.