குழந்தைகளை விற்கும் கும்பல் கைது

பெங்களூரு, நவ.28-
பெங்களூர் உட்பட கர்நாடகா மாநிலத்தில் குழந்தைகளை விற்பனை செய்து வந்த கும்பலை போலீசார் சினிமா மாடியில் வலை விரித்து கூண்டோடு கைது செய்து உள்ளனர். இந்த கும்பல் ஏழைகளை குறிவைத்து அவர்களுக்கு பணம் ஆசை காட்டி குழந்தைகளை வாங்கி உள்ளனர். குழந்தை பிறப்பதற்கு முன்பே பணம் கொடுத்து புக் செய்து உள்ளனர். வாழவே முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டு வரும் நபர்களை கர்நாடகம் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கண்டுபிடித்து அவர்கள் மனதை மாற்றி பணம் கொடுத்து பெற வைத்து உள்ளனர். பின்பு மருத்துவமனைகளுக்கு அவர்களை அழைத்து வந்து பிள்ளைகள் பிறந்த பிறகு குழந்தை பிறந்த பிறகு போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. மது அருந்திவிட்டு ஒருவர் உளறிய தகவலின் அடிப்படையில் தீவிர விசாரணையில் இறங்கி சிசிபி போலீசார் இந்த கும்பலை கூண்டோடு கைது செய்துள்ளனர். கர்நாடக மற்றும் தமிழ்நாட்டில் இந்த கும்பல் செயல்பட்டு வந்துள்ளது 8 பேர் கொண்ட இந்த கும்பலை போலீசார் வெற்றிகரமாக கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் ஆண், எஞ்சிய ஏழு பேர் பெண்கள். கண்ணன் ராமசாமி, முருகேஸ்வரி, சுஹாசினி, சரண்யா, ஹேமலதா, மகாலட்சுமி, கோமதி, ராதாமணி ஆகியோர் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்
குழந்தைகள் பிறப்பதற்கு அல்லது கருத்தரிக்கப்படுவதற்கு முன்பே இவர்களின் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கி விடுகிறது
செயல்படுகிறது என்றால், குற்றம் சாட்டப்பட்ட கும்பல் ஏழைப் பெண்களையும் அவர்களது குடும்பங்களையும் குறிவைக்கிறது, குறிப்பாக இளம் வயதினரை திருமணம் செய்து பல குழந்தைகளைப் பெற்றவர்களை. பணம் கொடுத்து ஏமாற்றி குழந்தை பிறக்கும் முன்பே ஒப்பந்தம் செய்து விடுகின்றனர். அவர்கள் கருத்தரித்து குழந்தைகளைப் பெற்ற பிறகு, குழு அவர்களை வாங்குகிறது. பிறகு வேறு ஒருவருக்கு விற்கிறார்கள்.
கர்நாடகா – தமிழ்நாட்டு பகுதிகளில் சட்டவிரோத குழந்தைகள் விற்பனை நடந்து வந்துள்ளது . இந்த கும்பலில் கைது செய்யப்பட்ட நான்கு பேரில் முருகேஸ்வரி , ஹேமலதா , சரண்யா ஆகியோர் தமிழ் நாட்டை சேர்த்தவர்கள் . மஹாலக்ஷ்மி என்பவர் பெங்களூரை சேர்ந்தவர். ராஜராஜேஸ்வரி நகரில் மஹாலக்ஷ்மி வாயிலாக பச்சிளம் குழந்தையை விற்க முயற்சித்து வந்தது குறித்து தகவல் அறிந்த போலீசார் இந்த குமபலை கைது செய்துள்ளனர் என நகர போலீஸ் ஆணையர் தயானந்த் தெரிவித்தார். அண்டைய தமிழ் நாடு மற்றும் கர்நாடக மாநிலத்தில் நடந்து வந்த பச்சிளம் குழந்தைகளை விற்கும் கோஷ்டியினரை சி சி பி டி சி பி ஸ்ரீனிவாஸ் கௌடா தலைமையிலான குழுவினர் நடவடிக்கைகள் மேற்கொண்டு கைது செய்துள்ளனர். பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளை லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு இந்த கும்பல் விற்று வந்துள்ளது. கடந்த நவம்பர் 23 அன்று ராஜராஜேஸ்வரி நகரில் பிறந்து 20 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்றை விற்க காரில் கொண்டுவந்தபோது கையும் களவுமாக இந்த கும்பல் சி சி பி போலீசாரிடம் சிக்கியுள்ளனர். இவர்களை பிடிக்க போலீசார் குழந்தைகளை வாங்கும் பெற்றோர் போல் நடித்து சினிமா மாதிரியில் குற்றவாளிகளை கைது செதுள்ளனர். குடிகாரன் ஒருவன் அளித்த முக்கியமான தகவலை வைத்து சி சி பி போலிசார் நடவடிக்கையில் இறங்கி இந்த ஊழலில் அபலை அனாதை பெண் உட்பட மருத்துவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் வரை தொடர்பு இருப்பது அறிந்து போலீசார் அசிர்ச்சியடைந்துள்ளனர் . இந்த சம்பவத்தில் மருத்துவர்களே முக்கிய தொடர்பாளர்களாக உள்ளனர். போலி ஆவணங்களை தயாரித்து குழந்தைகள் விற்கப்பட்டு வந்துள்ளன . இதில் அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருந்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த ஊழலில் விசாரணை நடத்தும் வேளையில் ஒவ்வொரு முகமாக வெளியே தெரிய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சி சி பி போலீசார் பல்வேறு கோணங்களில் இந்த விவகாரத்தை ஆனது வருகின்றனர். கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் குறைந்தது 50 முதல் 60 குழந்தைகளை மாநிலத்தின் பல மாவட்டங்களின் தம்பதியருக்கு விற்றுவந்துள்ளது தெரியவந்துள்ளது. ஏழை பெண்களுக்கு ஓரளவு பணம் கொடுத்து பின்னர் இவர்கள் அவர்களின் குழந்தையை வைத்து பல லட்சங்கள் சம்பாதித்து வந்துள்ளனர். தவிர இந்த அனைத்து விவகாரங்களிலும் பெங்களூருவை சேர்ந்த மஹாலக்ஷ்மி முக்கிய பங்கு வகித்துள்ளார் எனவும் தெரிய வந்துள்ளது.

இந்த கும்பல் அதற்கேற்ப்ப இந்த சந்தையை திட்டமிட்டு நடத்திவந்துள்ளது. முதலில் இந்த கும்பல் ஏழை பெண்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் மற்றும் சிறு வயதில் திருமணமாகி பல குழந்தைகளை பெற்று கொள்ளும் வாய்ப்புள்ளவர்களை குறியாக வைத்துஅவர்களுக்கு பணத்தாசை ஊட்டி குழந்தை பிறக்கும் முன்னரே டீல் நடத்திவிடுவார். அவர்கள் குழந்தை petra பின்னர் இந்த கும்பல் அவர்களிடமிருந்து குழந்தைகளை பெற்று கொள்வர் . பின்னர் லட்சணக்கான ரூபாக்கு குழந்தைகளை வேறொருவருக்கு விற்று விடுவர் . முருடேஸ்வரி என்பவர் கர்ப்பம் தரித்து அவர் பண பிரச்சனையில் இருப்பது ndha கோஷ்டிக்கு தெரிய வந்துள்ளது. தவிர கர்ப்பிணி சோதனைக்கு செல்லும் மருத்துவரே இந்த கோஷ்டியை  முருடேஸ்வரிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளனர் . பின்னர் கோஷ்டியினர் முருடேஸ்வரிக்கு முன்பணம் கொடுத்து அவர் குழந்தை பெற்றெடுக்கும் வரை பராமியாரித்தும் வந்துள்ளனர். பின்னர் அவர் குழந்தை பெற்றெடுத்தபின் மீத பணம் கொடுத்து குழந்தையை எடுத்து சென்றுள்ளனர். பின்னர் குழந்தை விற்கப்படுவது குறித்து நம்பகமான தகவலறிந்த போலீசார் ஆர் ஆர் நகரின் கோயில் அருகில் மாறுவேடத்தில் காத்திருந்துள்ளனர். அப்போது தமிழ் நாடுபதிவெண் கொண்ட கார் வந்துள்ளது. பின்னர் கோஷ்டியினர் குழந்தையை அவர்களுக்கு விற்க முயன்றபோது காயும் களவுமாக பிடிபட்டுள்ளனர்.