குழந்தை பெற்ற தாய்கள் சாப்பிட வேண்டிய உணவு


குழந்தை ஈன்ற தாய்மார்கள் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளையே உண்ண வேண்டும். முக்கியமாக அவர்களுக்கு முருங்கைக்கீரையை அதிகம் கொடுப்பார்கள். ஏனெனில் முருங்கைக்கீரையில் வைட்டமின் எ பி மற்றும் சி மற்றும் அதிக தாது மற்றும் ஊட்டச்சத்து அதிகம் உள்ளது. இதனால் உடலுக்கு தேவையான கால்சியம் அதிகளவில் கிடைக்கிறது.
வெள்ளிப்பூண்டில் ஆயுர்வேத அம்சங்கள் அதிகம் உள்ளன. மற்றும் வெள்ளைப்பூண்டு அனைத்து வித உடல் கோளாறுகளையும் எதிர்க்கும் சாமர்த்தியம் கொண்டது. அதனால் வெள்ளைப்பூண்டை உட்கொள்வதால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பூண்டை பல்வேறு பேஸ்டுகளிலும் பயன் படுத்துகிறார்கள். காய் வகைகளுடன் வெள்ளைப்பூண்டை சேர்த்துக்கொள்ளலாம் அல்லது சூப் செய்தும் குடிக்கலாம்.
அதே போல் சீரகத்தையும் அதிகமாக மசாலாக்களில் பயன் படுத்துகிறார்கள். சீரகத்தின் உபயோகமும் மிக அதிகமாகும். நம் உடலின் ஜீரண சக்தியை கூட்டும். மற்றும் சீரகமும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. தவிர ரத்த ஓட்டத்தையும் சீராக்கும். தவிர சீரகத்தில் அதிக அளவில் கால்சியம் மற்றும் இரும்புசத்து உள்ளது.
உலர்ந்த இஞ்சி பொடி தசைகள் வீக்கத்தை தணிக்க வல்லது. உடலில் கெட்ட அமிலங்கள் சுரப்பதை தவிர்க்கிறது. உலர்ந்த இஞ்சி பொடியை பல விதங்களில் மசாலாக்களுடன் பயன் படுத்தலாம்.
உணவில் வெந்திய கீரை மற்றும் வெந்தியதை பல காரணங்களுக்காக பயன் படுத்துகிறார்கள். மற்றும் அதிலும் ஏராளமான கால்சியம் உள்ளது. தவிர பிரசவம் ஆன பின்னர் சுமார் ஆறு மாதங்களாவது வெந்தியதை உணவில் சேர்த்து கொண்டால் தாய் பால் சுரப்பது அதிகரிக்கும் தவிர உடல் சோர்வையும் போக்கும்.
முட்டைகள் புரதங்களின் மூலமாகும் . முட்டைகள் தாய்ப்பாலில் அதிக கொழுப்பு அம்சங்கள் அதிகரிக்க செய்வதால் குழந்தைக்கு தாய்ப்பாலை அதிக ஊட்டச்சத்தாக மாற்றுகிறது. முட்டைகளை ஆம்லெட் செய்தும் அவற்றை கொதிக்க வைத்து அல்லது காலை ஆகாரமாகவும் வேக வைத்து உண்ணலாம்.