குழப்பத்தில் ஆழ்த்திய பூகம்பம்

ஜப்பான் ஜன.5- புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் உலகமே ஈடுபட்டு வந்த நிலையில், ஜப்பானுக்குத் துக்க தினமாக அமைந்ததன் காரணம், இஷிகாவா தீவில் 7.6 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட மகா பூகம்பம் தாக்கியதில் உயிரிழப்புகளும், மக்கள் பரிதவிப்பு அலறல்களும், கட்டிடங்கள் இடிந்து விழுந்ததும் ஆகும். இதோடு நிற்காமல் நூற்றுக்கணக்கான பின்னதிர்வுகள், சுனாமி எச்சரிக்கை, பேரலைகள் முதலானவை ஜப்பான் மக்களை அறியா பீதிகளுக்கு இட்டுச் சென்றது. மக்கள் மட்டுமல்ல, நிலநடுக்க ஆய்வாளர்கள், பூகம்ப ஆய்வு விஞ்ஞானிகளையும் இது குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜப்பான் உலகில் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும், ஏனெனில், ஜப்பான் நாடு நான்கு ஒன்றிணைந்த டெக்டானிக் பெருந்தாங்கு பாறைகளின் மேல் அமர்ந்திருக்கிறது. இவை ஒன்றுடன் ஒன்று தொடர்ந்து பெரிய அளவில் உராய்வுகளைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1,500 நிலநடுக்கங்கள் ஜப்பான் நாட்டைத் தாக்குகின்றன. இருப்பினும், பெரும்பாலானவை உணர முடியாத அளவுக்கு மிதமானவைகளே.
ஜப்பானில் உள்ள கனாசாவா பல்கலைக்கழகத்தின் நில அதிர்வு நிபுணர் யோஷிஹிரோ ஹிராமட்சு, “ஜப்பானில் பெரும்பாலான பெரிய பூகம்பங்கள் கிழக்கு கடற்கரையில் உள்ள பசிபிக் டெக்டானிக் பெரும்பாறை காரணமாக ஏற்படுகின்றன.