கூடுதல் நிதி கேட்கும் மாநகராட்சி

பெங்களூர், பிப். 15-
பெங்களூர் மாநகராட்சி, கடந்த ஆண்டு அரசிடம் இருந்து பெற்றதை விட, இரு மடங்கு அதிகமாக நிதியை வர இருக்கும் பட்ஜெட்டில் கோரி உள்ளது.‘பிராண்ட் பெங்களூரு’ உருவாக்குவதற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. அதில் உயர்த்தப்பட்ட தாழ்வாரம், சுரங்கப்பாதை சாலை, சுற்றுலாவை ஈர்க்கும் உயரமான கோபுரம் என்ற, ஸ்கை டெக், போன்ற திட்டங்களை மேற்கொள்ள 6 ஆயிரம் கோடி ரூபாயை பட்ஜெட்டில் நிதி ஒதுக்க மாநகராட்சி அரசிடம் கேட்டுள்ளது. முதல்வர் சித்தராமையாவின் முதல் திட்டமான இந்திரா கேண்டீன் நடத்த 200 கோடி ரூபாயை கேட்டுள்ளது.
திடக்கழிவு மேலாண்மைக்கு பெங்களூர் மக்களிடம் குப்பைகளை சேகரிக்கவும், அகற்றவும், இதற்காக ரூ.600 கோடி கேட்டு உள்ளது. மாநில பட்ஜெட்டில் பெங்களூர் மாநகராட்சிக்கு அரசு தாராளமாக நிதி வழங்கும் என எதிர்பார்ப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். புதிய மெட்ரோ வழித்தடங்களில் உயரமான சாலை அமைப்பதை உள்ளடக்கிய இரட்டை அடுக்கு திட்டங்களுக்கு நிதியையும் எதிர்பார்க்கப்படுகிறது.
சோதனை அடிப்படையில் இரண்டு கிலோமீட்டர் நீள சுரங்கப்பாதை சாலைகளுக்கும் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படலாம். ஸ்கை டெக் திட்டத்துக்கு அரசு நிதி அளிக்கப்படும். இது அரசின் மற்றொரு லட்சிய திட்டமாகும். பெங்களூர் சொத்துக்கள், 20 லட்சம் சொத்து பதிவுகளை டிஜிட்டல் மயமாக்குதலை ஏப்ரல் 2024ல் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இ – காத்தா மற்றும் வீடுகளுக்கு அசெஸ்மெண்ட் திட்ட ஒப்புதல் அமைப்பு தேவையை முதல்வர் சித்திராமையா, துணை முதல்வர் டி .கே. சிவகுமார் ஆகியோருடன் நடந்த ஆலோசனையில் மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.மொத்த 1700 கோடி ரூபாய் செலவில் திட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்திருந்தாலும், மாநில பட்ஜெட்டில் சாலைகள் ஒயிட் டாப்பிங் அறிவிக்கப்படலாம்.அரசு 800 கோடி ரூபாயை வழங்கும் மீதியுள்ள 900 கோடியை மாநகராட்சி தனது சொத்து வரி வசூலில் இருந்து திரட்டும்.மழை நீர் வடிகால் தடுப்பு மண்டலத்தை மேம்படுத்தவும், கையகப்படுத்தி 100 கிலோமீட்டர் புதிய சாலை அமைக்கவும், 200 கோடி ரூபாய் கூடுதல் மானியம் கேட்டுள்ளது.மேலும் 75 சந்திப்புகளை மேம்படுத்த நிதி கோரப்பட்டுள்ளது. பெங்களூர் போன்ற வேகமான வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு நிதி உதவியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், நகர வளர்ச்சி திட்டங்களுக்கு மாநில அரசு ஜி.எஸ்.டி.யில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை ஒதுக்க வேண்டும் என்றும், நகரின் பிரமுகர் அஸ்வின் மகேஷ் என்பவர் தெரிவித்துள்ளார்.