கூட்டு கற்பழிப்பு குற்றவாளி துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு

பெங்களூர் : ஆகஸ்ட். 18 – நகரின் புறப்பகுதியில் பன்னேர்கட்டா அருகில் போலீசாரின் துப்பாக்கி சத்தம் கேட்டிருப்பதுடன் ஒரு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் நடத்தி கொடூரமாக அவளை கொலையும் செய்தவனை போலீசார் துப்பாக்கியால் சுட்டு கைது செய்துள்ளனர். போலீசாரின் குண்டு காலில் பாய்ந்ததில் காயமடைத்துள்ள குற்றவாளி பன்னேர்கட்டாவின் பியாட்டராயணதொட்டி அருகில் பெண்ணை பாலியல் பலாதிகாரம் செய்து பின்னர் அவளை கொலையும் செய்துள்ள சோமா என்ற சோமசேகர் தற்போது நாராயணா ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதுடன் இவன் உயிராபத்திலிருந்து தப்பித்துள்ளான். பன்னேர்கட்டா அருகில் ஹக்கி பிக்கி காலனிலயில் இன்று காலை குற்றம் நடந்த இடத்திற்கு இட மகஜருக்காக குற்றவாளியை அழைத்து சென்றபோது சிறுநீர் கழிக்கும் சாக்கில் ஜீப்பிலிருந்து கீழே இறங்கிய சோமு பின்னர் தப்பியோட முயற்சித்துளான். பின்னர் அவனை பிடிக்க முயன்ற போலீஸ் மாதப்பா என்பவரை தடியால் தாக்கவும் முயற்சித்துள்ளான். .தடியை வீசியெறிந்து சரணடையும்படி ஜிகானி போலீஸ் இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் வானம் நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்தும் மீண்டும் சோமா போலீசாரை தாக்க முயற்சித்தபோது போலீசார் தற்காப்புக்காக சோமாவின் காலில் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் சுருண்டு விழுந்த அவனை பின்னர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பன்னேர்கட்டா பைட்டராயணதொட்டியில் உள்ள தன்னுடைய வீட்டிலிருந்து வெளியே வந்த முனிரத்தினா (38) என்ற பெண்ணை தனியான இடத்திற்கு இழுத்து சென்று குற்றவாளி சோமா உட்பட மூன்று காமுகர்கள் ஒன்று சேர்ந்து அவளை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் பின்னர் அவளை கொலை செய்து தப்பியோடியிருந்தனர். பெண்ணின் உடல் மீது காயங்கள் தென்பட்டதுடன் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து பார்த்தகிபோது பெண்ணை கற்பழித்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இந்த விவகாரத்தை தீவிரமாக கருகிய போலீசார் இதற்கென நான்கு குழுக்களை அமைத்து நடவடிக்கையிலிறங்கியதில் கஞ்சா போதையில் இருந்த பெண்ணை குற்றவாளிகள் கற்பழித்து பின்னர் அவளை கொலையும் செய்திருப்பது தெரியவந்து குற்றவாளிகள் அதே கிராமத்தில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இறந்த பெண்ணின் உடல் இருந்த இடத்தில் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் அதே இடத்தில் திரிந்து கொண்டிருந்த குற்றவாளிகள் செய்தியாளர்களுக்கு தகவல்கள் தெரிவித்தபடி தப்பிக்க முயற்சித்துள்ளனர்.பெண்ணின் குழந்தை காணாமல் போன போது தேடிக்கொண்டிருந்த நேரத்தில் குற்றவாளி மஹேஷும் தேடுவது போல் நடித்து சிலவே நிமிடங்களில் கொலையுண்ட பெண்ணின் குழந்தையை அழைத்து வந்திருந்தான். இதனால் விழிப்படைந்த போலீசார் தனி இடத்தில் இருந்த குழந்தையை ஐந்தே நிமிடத்தில் அழைத்து வந்த ஹரீஷை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். ஆனால் அவன் ஏதாவதொரு கதையைக்கூறி வந்துள்ளான். பின்னர் போலீசார் தங்களுக்கே உரிய மொழியில் (!) விசாரித்தபின்னர் கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த மூன்று பேர் சேர்ந்து பெண்ணை கற்பழித்து கொலை செய்திருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். இவனுடன் மேலும் இருவரை கைது செய்துள்ள ஜிகனி போலீசார் இட மகஜருக்கு அழைத்துவந்த போது சோமா தப்பிக்க முயற்சித்து இப்போது மருத்துவமனையில் போலிஸாரின் துப்பாக்கி சூட்டிற்கு சிகிச்சை பெற்று வருகிறான்.