கூண்டில் சிக்கிய சிறுத்தை

மண்டியா : ஜனவரி . 5 – ஸ்ரீரங்கபட்டனா தாலூகாவின் சப்பனகுப்பே சுற்றுப்பகுதி கிராம மக்களை அச்சுறுத்திவந்த சிறுத்தை கடைசியில் வனத்துறையினர் வைத்திருந்த கூண்டுக்குள் சிக்கியுள்ளது. சப்பனகுப்பே கிராமத்தின் சுற்றுப்பகுதியில் அடிக்கடி சிறுத்தைதென்பட்டுவந்தது. இதனால் பீதி அடைந்த கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் சிறுத்தையை பிடிக்க வற்புறுத்திவந்தனர். அதன்படி சப்பனகுப்பே கிராமத்தில் உள்ள பாலு என்பவரின் வயலில் வனத்துறையினர் கூண்டு வைத்திருந்தனர். இன்று அதிகாலை உணவு தேடி வந்த சிறுத்தை கூண்டில் இருந்த உணவை தின்ன உள்ளே வந்த போது சிறைபிடிக்கப்பட்டுள்ளது . சிறுத்தை கூண்டுக்குள் சிக்கிய தகவல் அறிந்த உடனேயே கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சடன் சிறைபிடிக்கப்பட்ட சிறுத்தையை பார்க்க கூடினர். மற்றொரு பக்கம் சிறுத்தை கூட்டுக்குள் சிக்கியுள்ள தகவல் அறிந்த உடனேயே வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.பின்னர் இந்த சிறுத்தையை தூர பகுதி வனத்தில் விட முடிவு செய்துள்ளனர்.