கூந்தலின் பராமரிப்புக்கு ஆளி விதைகள்

கூந்தலின் வளர்ச்சிக்கு நாம் போதுமான வகையிலான மருந்துகள் மற்றும் எண்ணெய் பயன்படுத்துகிறோம் .இவற்றில் இயற்கையான எண்ணெய் மற்றும் ரசாயன கலவைகள் உள்ள எண்ணெய்களை நம் கூந்தல் வளர்ச்சிக்கு மற்றும் அதன் ஆரோக்கியத்திற்கு பயன் படுத்துகிறோம். ஆனால் இன்று நமக்கு ஆயுர்வேதமளிக்கும் ஆரோக்கியமான உணவு பொருள் எனில் அது ஆழி விதைகளாகும். ஆளி விதைகள் ஒரு விதத்தில் நம் உடலின் ஆரோக்கியத்திற்கு பயன் படுவதுடன் , நம் கூந்தலின் வளர்ச்சி மற்றும் மிருது தன்மையை காப்பாற்றவும் ஒரு விதத்தில் உதவுகிறது . ஆளி விதைகளில் நம் உடலுக்கு தேவையான போதுமான அளவில் போஷாக்கு அம்சங்கள் அதிகளவில் கிடைக்கிறது. இந்த விதைகளில் ஒமேகா – 3 , பேட்டி ஆசிட் , நாரம்சம் , வைட்டமின் பி , காச நோய்க்கு எதிராக போராடவல்ல லிகினான் , மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட் அம்சங்கள் நிறைந்துள்ளன. ஆளி விதைகள் வெறும் நம் உள்உடல் ஆரோக்கியத்தை காப்பாற்றி நம்மை பல்வேறு வியாதிகளிலிருந்து பாதுகாக்கிறது என்று மட்டுமே தெரிந்திருந்தால் அது தவறு. ஆளி விதைகள் நம் உடலின் அழகை பராமரிப்பதிலும் அதே வகையில் உதவுகின்றன. இதற்கு உதாரணமாய் ஆளி விதைகளுடன் சிறிது நீர் சேர்த்து நன்றாக ருப்பி பேஸ்ட் போல் செய்துகொண்டு நம் நெற்றி மற்றும் கூந்தலுக்கு முழுதுமாக தடவினால் நம் கூந்தல் மிகவும் வலிமை ஆவதுடன் மிகவும் மிருதுவாகவும் அடர்த்தியாகவும் கூந்தல் வளரும். இது தவிர கூந்தல்களின் பிரச்சனைகளான கூந்தல் உதிர்வது தலை பொடுகுகளை தவிர்ப்பது ஆகியவற்றிற்கும் ஆழி விதைகள் உதவுகின்றன. ஆளி விதைகளை பல்வேறு விதங்களில் கூந்தலின் ஆரோக்கியத்திற்காக பயன்படுத்தலாம். சந்தைகளில் நமக்கு மிக எளிதாக ஆளி விதை எண்ணெய்கள் கிடைக்கின்றன. இதை வாங்கி நம் கூந்தலுக்கு ஹேர் மாஸ்க் போல் பயன்படுத்தலாம். இதுவரை நாம் தேங்காய் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் கொண்டு தலையில் மசாஜ் செய்வது போன்றே ஆழி எண்ணையை நெற்றியிலிருந்து முழு தலைக்கும் தடவி கூந்தல் முழுக்க மசாஜ் செய்து ஒரு இருபது நிமிடங்கள் ஊற வைத்து பின்னர் ஆயுர்வேத ஷாம்புக்கள் கொண்டு கழுவவும். ஆழி எண்ணையை தலை கூந்தலின் கண்டிஷனர் போலவும் பயன் படுத்தலாம். கூந்தல்கள் மிகவும் முரடாக இருந்தால் ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை தழுவிய பின்னர் ஆழி எண்ணெயை தேய்த்து நன்றாக மசாஜ் செய்தால் கூந்தல் மிருதுவாகும். ஆழி விதைகளை கூந்தலுக்கு ஹேர் மாஸ்க்போல் பயன்படுத்த முதலில் இந்த விதைகளுடன் சிறிது நீர் சேர்த்து ஒரு மிக்ஸியில்நன்றாக அரைத்துக்கொண்டு பேஸ்ட் செய்து கொள்ளவும். இந்த பேஸ்ட்டில் சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சாறை பிழிந்து நன்றாக கலக்கவும். இந்த கலவையை தலை கூந்தலின் அனைத்து பகுதிகளுக்கும் பரவும் வகையில் தேய்த்து சுமார் 45 நிமிடங்கள் வரை ஊற விட்டு பின்னர் கழுவவும். வாரத்திற்கு ஒரு முறையாவது இப்படி செய்து வந்தால் சிலவே நாட்களில் உங்கள் கூந்தல் அதி மிருதுவாகவும் பள பள வென்ற மினுமினுப்பும் மற்றும் செழிப்பாகவும் வளரும்