கூலிப்படையை சேர்ந்த மூன்று பேர் கைது

பெங்களூர்: ஏப்ரல். 17 – நபர் ஒருவரை கொலை செய்ய தீட்டிய திட்டத்தை சிக்கஜாலா போலீசார் தடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர் . இதில் கங்கா 19 ,மற்றும் பாலாஜி ஆகியோர் கோலார் மாவட்டத்தின் மாலூரை சேர்ந்தவர்கள். இதே போல் மாலூரை சேர்ந்த ஹெமரேட்டி (20) என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ஹெமரேட்டி என்பவர் கொலைக்கான கூலி கொடுத்துள்ளார். இதில் ககன் மற்றும் பாலாஜி இருவரும் சிறுவர் சீர்திருத்த நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். கடந்த ஏப்ரல் 15 அன்று நள்ளிரவு 12 மணியளவில் கண்டிகானஹள்ளியில் ஒரு அபார்ட்மெண்ட் அருகில் ஐந்து பேர் குரங்கு தொப்பி அணிந்து கொண்டு சந்தேகத்துக்கிடமான வகையில் திரிந்து கொண்டஇருப்பதை சிக்கஜாலா இரவு பணியில் இருந்த போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதே வேளையில் அந்த பகுதியில் சற்று தொலைவில் ஒரு டாடா சுனோ வாகனம் நின்றிப்பதும் வீதியின் வலப்புறம் இருந்த புதரில் மூன்று பேர் ஒளிந்திருப்பதும் தெரியவந்துள்ளது. மற்றும் மேலும் இருவர் இடப்புறம் கால்வாய் அருகில் ஒளிந்திருந்தனர். பின்னர் இவர்களை விசாரணை மேற்கொண்ட பொது கிஷோர் (30) என்பவரை கொலை செய்ய ஹேமரெட்டி கூலி கொடுத்ததாக ஒப்புக்கொண்டனர். இதற்க்கு கிஷோர் ஹெமரேட்டியின் திருமணமான 24 வயது தங்கையுடன் தொடர்பு வைக்க முயற்சித்ததே காரணம் என்றும் குற்றவாளிகள் தெரிவித்தனர். ஹாரோஹள்ளியில் சாய் க்ரீன் பார்க் லே அவுட்டில் கிஷோர் வசித்து வந்துள்ளான். கடந்த ஏப்ரல் 15 அன்று கிஷோர் மைசூரிலிருந்து பெங்களூருக்கு பயணித்துள்ளான். பின்னர் இருசக்கர வாகனத்தில் கண்டிகானஹள்ளி வழியாக தன் வீடு நோக்கி சென்றுள்ளான். ஹெமரேட்டி தங்களுக்கு மூன்று லட்ச ரூபாய் மற்றும் ஆயுதங்கள் கொடுத்து வாடகை காரும் கொடுத்து கிஷோரின் நடமாட்டம் குறித்து தங்களுக்கு போனில் தெரிவிப்பதாகவும் ஹெமரேட்டி தங்களிடம் தெரிவித்ததாக குற்றவாளிகள் டெஹ்ரிவித்தனர். காரில் சோதனை செய்த போது அதில் மூன்று அரிவாள்கள் இருந்தன. பின்னர் போலீசார் இவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து மேலும் விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் இவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனம் , ஆயுதங்கள் மற்றும் குரங்கு தொப்பிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தற்போது குற்றவாளிகளிடம் கூடுதல் விசாரணை நடந்து வருகிறது.