கேஎஸ்ஆர்டிசி ஊழியர்களுக்கு பம்பர்

பெங்களூரு, மார்ச்.16-
இது தேர்தல் நேரம் என்பதால் அரசிடம் முன்வைக்கும் கோரிக்கைகள் அனைத்தும் விரைவாக நிறைவேற்றப்பட்டு வருகிறது இதன்படி கர்நாடக மாநில அரசு போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டு அவர்களுக்கு 15 சதவிகிதம் சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு பம்பர் பரிசாக இந்த தகவலை முதல் வசதி பொம்மை அறிவித்துள்ளார்
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநில சாலைப் போக்குவரத்துக் கழக ஊழியர்களின் சம்பளத்தை சீரமைக்க வேண்டும். என்பதில் அரசு உறுதியுடன் இருந்தது இந்த நிலையில் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று 15 சதவீதம் சம்பளம் உயர்வு அளிக்கப்படுகிறது
கர்நாடக மாநிலத்தில்
மின் துறை ஊழியர்களுக்கு நேற்று சம்பளத்தை 20 சதவிகிதம் சம்பளம் உயர்த்த முடிவு செய்தோம். இன்று கேஎஸ்ஆர்டிசி ஊழியர்களுக்கும் சம்பளம் 15 சதவிகிதம் அதிகரிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த இரு முடிவுகளின் அரசாணை இன்று வெளியிடப்படும் என்று முதல்வர் கூறினார்.
கடந்த 3-4 ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லை எனக்கூறி சம்பளத்தை உயர்த்துமாறு கேஎஸ்ஆர்டிசி ஊழியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். சதவீதத்தின் படி சம்பளத்தை 15 வீதத்தால் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறும் போது
மகாராஷ்டிர மாநிலத்தின் எல்லையோரப் பகுதிகளில் உள்ள கிராம மக்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மகாராஷ்டிர அரசு செயல்படுத்தியிருப்பது மன்னிக்க முடியாதது மற்றும் கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மகாராஷ்டிர முதல்வர் ஆகியோரிடமும் பேசுவேன் என்றார்.
முதல்வர் பசவராஜ் பொம்மை மேலும் கூறும்போது மகாராஷ்டிர அரசு ஆத்திரமூட்டும் வகையில் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. நாங்கள் மனது வைத்திருந்தால் என்ன செய்திருக்க முடியும் என்பதை மகாராஷ்டிர அரசு தெரிந்து கொள்ள வேண்டும். மகாராஷ்டிர எல்லையில் உள்ள பல கிராம பஞ்சாயத்துகள் கர்நாடகாவுடன் இணைய முடிவு செய்துள்ளன. இதை மகாராஷ்டிரா புரிந்து கொண்டால் நல்லது என்றார்.
கர்நாடகா எல்லையில் உள்ள 865 கிராமங்களுக்கு மஹாராஷ்டிரா அரசு மருத்துவக் காப்பீடு வழங்கியுள்ளது. அதைத் தடுப்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சருடன் ஆலோசிப்பதாகக் கூறிய முதல்வர் பசவராஜ் பொம்மை, எல்லைப் பிரச்னை நீதிமன்றத்தில் தீர்க்கப்படும் வரை மகாராஷ்டிரா அரசு இப்படி நடந்துகொள்வது மன்னிக்க முடியாதது என்றார்.
மைசூர்-பெங்களூரு நெடுஞ்சாலை சுங்கவரி வசூல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலை வந்தால் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் இவ்வாறு முதல்வர் கூறினார்