கேஎஸ்ஆர்டிசி பஸ் கவிழ்ந்தது பயணிகள் தப்பினர்

மடிக்கேரி, செப்டம்பர் 4- மடிகேரி நகரை அடுத்துள்ள பொக்கேரி திருப்பத்தில் கேஎஸ்ஆர்டிசி பஸ் விபத்துக்குள்ளானது.
மடிக்கேரியில் இருந்து மைசூர் நோக்கிச் சென்ற பஸ்சும் மடிக்கேரி நோக்கி வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் கேஎஸ்ஆர்டிசி பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் இருந்த 21 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பைக் ஓட்டியவரும் லேசான காயம் அடைந்து உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பி அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் மடிகேரி கிராபுற காவல்நிலைய சரகத்தில் நடந்துள்ளது.