கேஎஸ்ஆர்டிசி பஸ் கார் மோதல் 6 பேர் பலி

பெங்களூரு, ஆக.28-
கனகபுரா தாலுகாவில் உள்ள கெம்மலே கேட் அருகே மலே மகாதேஷ்வர் மலையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த கார் மற்றும் கேஎஸ்ஆர்டிசி பஸ் இடையே ஏற்பட்ட பயங்கர விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.
KA01MF 8055 என்ற டொயோட்டா குவாலிஸ் காரில் கோவிலுக்குச் சென்று திரும்பும் போது விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.பலர் படுகாயமடைந்தனர்.
விபத்தின் போது காரில் சிக்கிய காயம் அடைந்தவர்களை கிரேன் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவல் அறிந்ததும் உடனடியாக சாத்தனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் விபத்தில் பலியானவர்கள் குறித்த விபரம் உடனடியாக தெரியவில்லை விபத்து நடந்த இடத்தில் நீண்ட நேரம் போக்குவரத்து தடைப்பட்டது