பெங்களூர், செப். 6-
இன்று ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு, பெங்களூர் வெஸ்ட் ஆப் கார்டு ரோடு பகுதியில் உள்ள இஸ்கான் கோவிலில், பிரம்மாண்டமாக விழா நடைபெறுகிறது. எனவே இச்சாலையில் நெரிசலை தவிர்க்க பஸ்களுக்கு மாற்று வழியை போக்குவரத்து துறை போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
பெங்களூர் ராஜாஜி நகர்வெஸ்ட் டாப் கார்டு, டாக்டர் ராஜ்குமார் சாலை ஆகியவைகளில் பி. எம். டி. சி., மற்றும் கே. எஸ். ஆர். டி. சி. பஸ் களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.பெங்களூர் எஸ்வந்தபூர் மேம்பாலம், மாரம்மா வலது புறம் சதுக்கம், மர்கோசா சாலை, கே. சி. ஜெனரல் ஆஸ்பத்திரி, சேஷாத்திரிபுரம் வழியாக மெஜஸ்டிக் செல்லும்.ஒராயன் மால் வழியாக வெஸ்ட் ஆப் கார்டு ரோடு சாலையில் இருந்து, விஜயநகர் செல்லும் பேருந்துகள், ராஜாஜி நகர் பத்தாவது கிராஸ் சாலை வழியாக வலது புறம் திரும்பி, ராஜாஜி நகர் முதல் பிளாக்கில் இடது புறம் சென்று, மாகடி சாலை வழியாக நோக்கி, செல்ல வேண்டும்.தொலைதூர ஊர்களுக்கு செல்லும் பயணிகள் பஸ்களில் செல்ல யஷ்வந்தபூர், மெஜஸ்டிக் நிலையங்களில் இருந்து நேரடியாக பஸ்களில் செல்லலாம்.வழக்கம்போல, மெட்ரோ ரயில் போக்குவரத்து இருக்கும். பஸ்களுக்கு பதிலாக மக்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். திருவிழாவின் காரணமாக இஸ்கான் கோவில் முன்புறம் உள்ள சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வாகன ஓட்டுநர்கள் மாற்று வழிகளை பயன்படுத்துவது சிறந்தது .ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.இன்று மாலை 3:37 மணிக்கு துவங்கி, மூன்று நாட்கள் நடைபெறும் ஸ்ரீ கிருஷ்ண ஜன்மாஷ்டமி செப்டம்பர் 6ம் தேதி நள்ளிரவு கொண்டாடப்படுகிறது.
ஆனால், வைஷ்ணவர்கள் இவ்விழாவை செப்டம்பர் 7ல்கொண்டாடுகிறார்கள்.
செப்டம்பர் 6 காலை 7 :57 மணிகு அஷ்டமி திதியும், மதியம் 2: 39 மணிக்கு ரோகினி நட்சத்திரமும் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.