கேஏஎஸ் அதிகாரி எல்.சி.நாகராஜ் ராஜினாமா ஏற்பு

பெங்களூர்: மார்ச். 11 – ஐ எம் ஏ மோசடிகள் தொடர்பாக லஞ்சம் வாங்கிய குற்றத்திற்கு உட்பட்டு கைதாகி பணிநீக்கம் செய்யப்பட்டிருந்த கே ஏ எஸ் அதிகாரி எல் சி நாகராஜ் தன பதவிக்கு அளித்திருந்த ராஜனாமாவை மாநில அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் ஏற்கெனவே பணிநீக்கத்தில் உள்ள எல் சி நாகராஜ் தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னுடைய பதவியை ராஜனாமா செய்துள்ளார். இவருடைய ராஜனாமாவை மாநில அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் அவருக்கு எதிராக ஏற்கெனவே பதிவாகியுள்ள குற்றச்சாட்டுகள் , மற்றும் அவற்றிற்கான தண்டனைகள் , துறை வாயிலான விசாரணைகள் , இணை துணை விசாரணைகள் , லோகாயுக்தா புகார்கள் , சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் , மற்றும் எதிர்காலத்தில் இவருக்கு எதிராக உருவாகும் எவ்வித குற்றச்சாட்டுகள் குறித்தும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அரசு இவருடைய ராஜினாவை அங்கீகரித்துள்ளது.