கேசரி பேடா


தேவையான பொருட்கள்
ஒரு லிட்டர் பால்
நூறு கிராம் சர்க்கரை
ஏலக்காய் தூள்
கேசரி மற்றும் பிஸ்தா – சிறிதளவு
செய்யும் முறை: முதலில் பாலை கொதிக்க வைக்கவும். பின்னர் தீயை சிம்மில் வைத்து அதிக நேரம் கொதிக்க விடவும். பால் சற்று கெட்டியாக வேண்டும். ஆனால் பால் கொதிக்கும் போது அடிக்கடி கலரி விட்டுக்கொண்டே இருக்கவேண்டும். பால் கெட்டியான பின் அதில் சர்க்கரை போட்டு கலக்கவும். பின்னர் கேசரியை போடவும். கேசரி போட்ட பின்பு பால் மஞ்சள் நிறத்துக்கு மாறும். இந்த கலவை மேலும் கெட்டியானபின் தீயை அணைத்து விடவும். பின்னர் இந்த கலவையை மீண்டும் கைகளால் கலக்கவும். பின்னர் இதை ஆற விடவும். பின்னர் அதை சிறு சிறு உருண்டைகளாக்கிக்கொள்ளவும். பின்னர் மெல்ல அழுத்தவும். அதன் மீது பிஸ்தாவை தூவவும். இவ்வளவு செய்தால் போதும் .நீங்களும் ஒரு ஸ்வீட் ஸ்டால் வைக்கும் அளவிற்கு ஒரு புதுமையான கேசரி பேடாவை செய்யும் திறமை பெற்றவர்களாவீர்கள். இதையே கோவா போட்டு செய்தால் இன்னும் எளிது மட்டுமின்றி சுவையும் கூட. கோவா பயன்படுத்தினால் பால் ஒரு கரண்டியே போதும்