கேஜிஎப் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

பெங்களூரு, ஜன.18- டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நாளை (ஜனவரி 19) காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கேஜிஎப் பாபுவுக்கு அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.
மே 2022 இல், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு தொடர்பாக, ஆயிரக்கணக்கான கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரர் என்று கவனத்தை ஈர்த்த கேஜிஎஃப் பாபுவின் வீட்டில் வருமான வரித்துறைசோதனை நடத்தியது.
கடந்த ஆகஸ்ட் மாதம், சாமராஜ்பேட்டை எம்எல்ஏ ஜமீர் அகமது கானுக்கு பல கோடி ரூபாய் கடன் கொடுத்த குஜிலி வியாபாரி, யூசுப் ஷெரீப் என்கிற கேஜிஎப் பாபுவை அமலாக்கத்துறை விசாரித்தது. தற்போது மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் முறைகேடு வழக்கில் சிக்கியுள்ள எம்எல்ஏ ஜமீர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி விசாரணை நடத்தினர். அப்போது கேஜிஎப் பாபுவிடம் ரூ. 3 கோடி. கடன் வாங்கியதாக ஜமீர் கூறியிருந்தார்.
இதன் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள், கேஜிஎப் பாபுவின் வீட்டில் சோதனை நடத்தி, மதிப்புமிக்க பொருட்களை பறிமுதல் செய்து, தீர்ப்பாயத்தில் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது