கேன்டர் வாகனம் மோதி இரண்டு பேர் சாவு

பெங்களூர் : ஆகஸ்ட். 2 – கேன்டர் வாகனம் ஏறியதால் இரண்டு பாதசாரிகள் சம்பவ இடத்திலேயே இறந்துள்ள விபத்து ஹேப்பாகோடி போலீஸ் சரகத்தில் நடந்துள்ளது. பீஹார் மாநிலத்தை சேர்ந்த ஆஷிஷ் (28) மற்றும் தமிழ் நாட்டை சேர்ந்த மனோஜ் குமார் (30) ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள். வெளி மாநிலங்களிருந்து பெங்களூருக்கு வந்து தின கூலி அடிப்படையில் பையோகான் நிறுவனத்தில் இவர்கள் இருவரும் பணியாற்றி வந்துள்ளனர் , ஹெப்பகோடியில் உள்ள நிறுவனத்தில் இருந்து இவர்கள் இருவரும் உணவுக்காக சாலையின் நடைபாதையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.அப்போது பழ மார்க்கெட்டிலிருந்து பழங்களை ஏற்றி கொண்டு வேகமாக வந்து கொண்டிருந்த கேன்டர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து இவர்கள் இருவரின் மீதும் மோதியதில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.இந்த விபத்து தொடர்பாக வாகனம் மற்றும் வாகன ஓட்டுனரை ஹெப்பகோடி போலீசார் தங்கள் வசம் எடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.