கேபிடிசிஎல் தேர்வு மோசடி எலக்ட்ரானிக் கருவி கொடுத்து உதவிய குற்றவாளி கைது

பெலகாவி : செப்டம்பர் . 9 – கே பி டி சி எல் இளம் பொறியாளர் தேர்வுகளில் நடந்துள்ள மோசடிகள் விவகாரம் தொடர்பாக பல்வேறு எலெக்ட்ரானிக் உபகரணங்களை கொடுத்துதவிய குற்றவாளியை மாவட்ட போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரின் தேவசந்திரா பகுதியை சேர்ந்த முஹம்மத் அஜீமுதீன் என்பவன் கைது செய்யப்பட்ட குற்றவாளி . இவனுடைய கைதால் கே பி டி சி எல் இளம் பொறியாளர் தேர்வு மோசடிகள் விவகாரமாக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. முக்கிய குற்றவாளி சஞ்சு பண்டாரி மற்றும் பெலகாவியின் மற்றவர்களுக்கு குற்றவாளி எலெக்ட்ரானிக் உபகரணங்களை கொடுத்து வந்துள்ளான். எலெக்ட்ரானிக் கருவிகள் பயன் படுத்தி ஏழு என் -95 மாஸ்க் , 41 எலெக்ட்ரானிக் உபகரணங்கள் ,பயன்படுத்திய பனியன்கள் , 445 எலெக்ட்ரானிக் காது கருவிகள் , 554 விதவித சார்ஜிங்க் வொயர்கள் , 6 வாக்கி டாக்கி ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. . பெலகாவி போலிஸாரின் தீவிர நடவடிக்கையால் இந்த விவகாரத்தின் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டான். மத்திய மற்றும் மாநில அரசுகளால் இதுவரை நடந்த பல்வேறு நியமன தேர்வுகளுக்கு எலெக்ட்ரானிக் உபகரணங்கள் உதவியிருப்பது குறித்து சந்தேகம் வந்திருந்தது. தேர்வுகளில் மோசடிகள் நடத்த எலெக்ட்ரானிக் கருவிகள் பயன்படுத்தியிருப்பது தெரிய வந்து பெங்களூரின் எஸ் பி வீதியில் ஒரு எலக்ட்ரானிக் கருவிகள் கடையை குற்றவாளி வைத்துள்ளான். இப்போது அந்த கடையில் சோதனைகள் நடத்தி குற்றவாளியை போலீசார் பெலகாவிக்கு அழைத்து வந்துள்ளனர். கே பி டி சி எல் இளம் பொறியாளர் தேர்வுகளில் மோசடிகள் நடந்திருப்பதுடன் குற்றவாளிகளை தேடி பிடிக்க முயற்சித்த போலீசாரிடம் முக்கிய குற்றவாளி சிக்கியுள்ளார்.