
திருவனந்தபுரம்: அக்டோபர் 9-கேரளாவில் ஒணம் பம்பர் லாட்டரி குலுக்கல் முடிந்த நிலையில் பரிசு அடிக்கவில்லையே என ஏமாற்றத்துடன் திரியும் சேட்டன்களை குஷிப்படுத்தும் வகையில் அடுத்த பம்பர் லாட்டரியை அறிமுகம் செய்துள்ளது. இந்த பூஜா பம்பரில் எவ்வளவு பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. யாரோ ஒருவருக்கு பரிசுத்தொகை அடிக்க பல லட்சக்கணக்கானவர்கள் தங்கள் போட்ட பணத்தையும் இழக்க வேண்டியுள்ளது. கேரளா லாட்டரி டிக்கெட் லாட்டரியால் ஏழை எளிய மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டதால் தமிழகத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு அப்போதைய அரசு லாட்டரிக்கு தடை விதித்தது. இந்த தடையை தொடர்ந்து தமிழகத்தில் லாட்டரி விற்பனை சட்ட விரோதம் ஆகும். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர பிரதேசங்களில் லாட்டரிகளுக்கு தடை உள்ளது.
இந்தியாவில் கேரளா, அருணாசல பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரிக்கு அனுமதி உள்ளது. இதில் கடவுள் தேசமான கேரளா தான் லாட்டரி மிகவும் பிரபலமாக உள்ளது. கேரளாவிற்கு காலடி எடுத்து வைத்தால் நாம் பார்க்கும் முதல் கடையாக லாட்டரி டிக்கெட்டே இருக்கும். அந்த அளவிற்கு கேரளாவில் மக்கள் மத்தியில் லாட்டரி பரிட்சயமாக உள்ளது.
முதல் பரிசு எவ்வளவு? ஒரு டிக்கெட்டின் விலை ரூ500 ஆக இருக்க பலரும் ஒன்றிற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை வாங்கி ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்து புலம்பி வருவதையும் பார்க்க முடிகிறது.
இந்த நிலையில், கேரள லாட்டரி பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அடுத்த பம்பர் லாட்டரி அமல் ஆகியுள்ளது. பரிசு விவரங்கள்: மூன்றாவது பரிசு: ரூ.5 லட்சம் (10 டிக்கெட்டுகளுக்கு) நான்காவது பரிசு: ரூ.3 லட்சம் (5 டிக்கெட்டுகளுக்கு) 5 வது பரிசு: ரூ.2 லட்சம் (தலா 5 டிக்கெட்டுகளுக்கு) இதுபோக, 5 ஆயிரம், 500, 300 ரூபாய் பரிசுத்தொகையும் உள்ளது. மொத்தம் 45 லட்சம் டிக்கெட்டுகள் அச்சிடப்பட உள்ளன. குலுக்கல் நவம்பர் மாதம் 22 ஆம் தேதி நடைபெறுகிறது.














