கேரளாவில் பால் விலை லிட்டருக்கு ரூ.8 உயருகிறது

திருவனந்தபுரம், நவ- 14
கேரளாவில் அரசு துறை நிறுவனமான மில்மா மூலம் பால் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. கேரளாவில் பாலுக்கான கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து உற்பத்தியாளர் கோரிக்கை குறித்து பரிசீலித்து அறிக்கை அளிக்க அரசு குழு ஒன்றை நியமித்தது. அக்குழுவினர் இப்பிரச்சினை குறித்து ஆய்வு செய்தனர். இது தொடர்பான அறிக்கையை அவர்கள் அரசிடம் அளித்தனர். அதில் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூ.7 முதல் 8 வரை உயர்த்தலாம் என கூறியிருந்தனர். இந்த அறிக்கை குறித்து அரசு அதிகாரிகள் இன்று முடிவு செய்ய உள்ளனர். இது தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளுடனும் இன்று ஆலோசனை நடக்க உள்ளது. இக்கூட்டத்தில் கேரளாவில் பால் விலையை உயர்த்துவது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. அதன்பின்பே பால் விலை லிட்டருக்கு எவ்வளவு உயரும் என்பது தெரியவரும்.