கேரளாவில் மொத்தமாக அள்ளும் இந்தியா கூட்டணி

திருவனந்தபுரம், மார்ச் 13- வரும் லோக்சபா தேர்தலிலும் பாஜகவுக்கு கேரளாவில் ஏமாற்றமே மிஞ்சும் என்று ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்தியா கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் எனவும் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லோக்ச்பா தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ளன. தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக மீண்டும் ஆட்சியை பிடித்து ஹாட்ரிக் முறையாக ஆட்சி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.
தேவேளையில், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகள் பாஜகவை வீழ்த்த வியூகம் வகுத்து வருகின்றன.
நாடு முழுவதும் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை என அரசியல் கட்சிகள் பரபரபக்க ஆரம்பித்துவிட்டன.
தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு உள்ளது என்பது தொடர்பாக பல்வேறு செய்தி நிறுவனங்களும் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி கேரளாவில் மொத்தம் உள்ள 20 லோக்சபா தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களே வெற்றி பெறுவார்கள் என்று கருத்துக்கணிப்பு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
கேரளாவில் இதுவரை வெற்றி பெறாத பாஜக.. இம்முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற கனவுடன் வியூகம் வகுத்து வருகிறது. ஆனால், ஏபிபி சி வோட்டர் கருத்துக்கணிப்பின் படி பாஜகவுக்கு கேரளாவில் இந்த முறையும் ஏமாற்றமே மிஞ்சும் எனக்கூறப்பட்டுள்ளது.
வாக்கு சதவிகிதத்தை பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 45 சதவிகிதம் இடதுசாரிகள் கட்சிக்கு 31 சதவிகிதமும், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு 20 சதவிகிதமும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாம்.
4 சதவிகித வாக்குகள் பிற கட்சிகளுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.