கேரளாவில் 2-வது வந்தே பாரத் ரெயில் சேவை நாளை தொடக்கம்

திருவனந்தபுரம்:செப்.23- வந்தே பாரத் ரெயில் சேவை நாடு முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. கேரள மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே வந்தே பாரத் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேரில் தொடங்கி வைத்தார். இந்நிலையில் கேரளாவில் 2-வது வந்தே பாரத் சேவை நாளை தொடங்கப்படுகிறது. திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே இயக்கப்படும் அந்த ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நாளை தொடங்கி வைக்கிறார். ஆலப்புழா வழியாக செல்லும் இந்த ரெயில் திங்கட்கிழமை தவிர வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம் சந்திப்பு, திருச்சூர், சொரனூர், திரூர், கோழிக்கோடு ஆகிய ரெயில் நிலையங்களில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே இயக்கப்படும் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் நாளை தொடங்கி வைக்கிறார்.

கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம் சந்திப்பு, திருச்சூர், சொரனூர், திரூர், கோழிக்கோடு ஆகிய ரெயில் நிலையங்களில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.