
துபாய், அக். 28- ஐக்கிய அரபு அமீரக லாட்டரியில் கேரளாவை சேர்ந்த 29 வயதே ஆன அனில்குமார் என்பவருக்கு வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பெரிய தொகை பரிசாக கிடைத்துள்ளது. ரூ.226 கோடி தொகையை பரிசாக வென்ற அனில் குமார், பரிசுத்தொகை பெற்ற எண்ணை தேர்வு செய்தது எப்படி? பணத்தை எப்படி செலவு செய்ய போகிறேன் என்பது உள்ளிட்ட தகவல்களை பகிர்ந்துள்ளார். கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக்கொண்டு கொடுக்கும் என்று ஒரு பழமொழியை கேள்விப்பட்டு இருப்போம். இது எதற்கு பொருந்துகிறதோ.. இல்லையோ, லாட்டரியில் பரிசு அடிப்பவருக்கு 100 சதவீதம் பொருந்தும் எனலாம். பெயிண்ட் கடை ஊழியருக்கு ரூ.25 கோடி பரிசு லாட்டரி டிக்கெட் வாங்க கூட காசு இல்லாமல், கடனாக வாங்கிவிட்டு சில மணி நேரத்தில் பல கோடிகளுக்கு அதிபதியாகும் நிகழ்வுகளும் கூட நடந்திருக்கிறது என்பதை கேள்விப்பட்டு இருப்போம். சமீபத்தில் கேரளாவில் ஓணம் பம்பர் லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. இந்த ஓணம் பம்பரில் முதல் பரிசாக ரூ.25 கோடி பெயிண்ட் கடையில் வேலை பார்க்கும் சரத் நாயர் என்பவருக்கு அடித்தது. இத்தனைக்கும் அவர் முதல் முறையாக பம்பர் லாட்டரியை வாங்கியிருந்தார். இது ஒருபக்கம் என்றால், மற்றொரு பக்கம் வாழ்நாள் முழுவதும் டிக்கெட் வாங்கியும் ஒரு ரூபாய் கூட பரிசு அடிக்காமல் ஏமாந்தவர்கள்தான் ஏராளம். கேரள நபருக்கு ரூ.226 கோடி பரிசு இந்தியாவில் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் லாட்டரி டிக்கெட்டுகள் இருப்பது போல, ஐக்கிய அரபு அமீரகத்திலும் லாட்டரிகள் உள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கி பணியாற்றும் இந்தியர்கள் பலருக்கும் அவ்வப்போது பரிசுத்தொகை அடித்துவிடுகிறது. சாதாரண கூலி வேலைக்கு போனவர்கள் கூட பல கோடிகளை வென்று வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடும் நிகழ்வுகள் கூட நடப்பதாக அங்குள்ளவர்கள் சொல்வதை பார்க்க முடிகிறது


















