கேரள முன்னாள் மந்திரி புகாரின் பேரில் ஸ்வப்னா சுரேஷ் மீது போலீசார் வழக்கு

திருவனந்தபுரம், ஜூன் 9- ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அதன் தூதரகத்துக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த பார்சலில் தங்கம் கடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி தூதரக முன்னாள் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் உள்பட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். தங்கம் கடத்தல் விவகாரத்தில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் அலுவலக ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை கொச்சி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதன் விசாரணைக்கு கடந்த 2 நாட்களாக கோர்ட்டில் ஸ்வப்னா சுரேஷ் ஆஜரானார். அப்போது நிருபர்களிடம் பேசிய அவர், தங்கம் கடத்தல் வழக்கில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்தார்