கேழ்வரகு ரொட்டி


தேவையான பொருட்கள்
கேழ்வரகு மாவு -இரண்டு கப்
துண்டாக்கிய வெங்காயம் -ஒன்று
இஞ்சி துண்டு -ஒரு டீ ஸ்பூன்
மிளகாய் -ஒன்று
சீரகம் ,உப்பு -ஒரு டீ ஸ்பூன்
சூடு தண்ணீர் -முக்கால் கப்
எண்ணெய், கறிவேப்பிலை, வெந்தய கீரை கொத்துமல்லி -சிறிதளவு
செய்யும் முறை-
பெரிய பாத்திரத்தில் கேழ்வரகு மாவை எடுத்துக்கொள்ளவும். . வெங்காயம் ,இஞ்சி துண்டு ,மிளகாய் ,கறிவேப்பிலை வெந்தியகீரை மற்றும் கொத்துமல்லி சேர்த்து , சீரகம் , உப்பு உடன் சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது சுடுநீரை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். . பின்னர் எண்ணெய் சேர்த்து ஒரு நிமிடம் பிசையவும் .. இன்னும் மாவு மிருதுவாக வேண்டுமெனில் சற்று நீரை சேர்க்கவும்.
வாழை இலையில் தயாரிக்க- வாழை இலையை எண்ணெயால் தேய்க்கவும் . வாழை இல்லை மிருதுவாக இல்லை எனில் சற்று சூடு செய்யவும் . பின்னர் அதன் மீது என்னை தேய்க்கவும் பந்து அளவிற்கு மாவை எடுத்து மெலிதாக நிதானமாக தட்டவும் . மூன்று.புரைகளாக செய்து நடுவில்எண்ணெய் சேர்த்தால் இது சாத்தியம் .பின்னர் சூடான தவா மீது நிதானமாக போடவும். ஒரு நிமிடத்திற்கு பின்னர் நிதானமாக வாழை இலையை இழுக்கவும் . ஒரு பக்கம் வெந்தபின்னர் மாரு பக்கம் திருப்பி போடவும் .இப்போது சற்று எண்ணெய் சேர்த்து சிவக்க சுடவும். இறுதியாக வெண்ணெய் மற்றும் மசாலா பொடி கலந்த சட்னியுடன் சேர்த்து கேழ்வரகு ரொட்டியை சுவைத்து மகிழவும்.