கே.ஆர்.புரம் ஒயிட்பீல்டு மெட்ரோ ரயில் 25ம் தேதி மோடி துவக்கி வைக்கிறார்

பெங்களூர் : மார்ச். 18 – அரசு துறைகள் தெரிவிக்கும்படி வரும் 25 அன்று கே ஆர் புரம் மற்றும் வொயிட் பில்ட் இடையேயான புதிய மெட்ரோ ரயில் மார்கத்தை பிரதமர் நரேந்திர மோதி துவக்கிவைக்க உள்ளார். 13..71 கிலோமீட்டர் நீளமான இந்த மெட்ரோ ரயில் பாதை பணிகள் எப்போது முடிவடையும் என மெட்ரோ நிர்வாகம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை எனினும் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வரும் 25 அன்று வரும் பிரதமர் மோதி இந்த ரயில்பாதையை துவக்கிவைக்க உள்ளார். இந்த ரயில் தடயம் மார்ச் இறுதிவாரத்தில் துவக்கிவைக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து மெட்ரோ நிர்வாகத்தின் மற்றொரு தகவல் கூறும்படி இந்த பாதையை துவக்கிவைக்க பிரதமர் அலுவலகத்திற்கு ஏற்கெனவே கோரிக்கை வைத்திருப்பதுடன் இது குறித்து இது வரை எவ்வித அதிகாரபூர்வ தகவலும் இல்லை என தெரிவிக்கின்றது. ஆனாலும் இந்த மார்கத்தில் வர்த்தக போக்குவரத்தை துவங்க மெட்ரோ நிர்வாகம் தயாராயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கெங்கேரி மற்றும் பையப்பனஹள்ளி இடையே தற்போது உள்ள ஊதா மார்க்கத்தின் மற்றொரு பிரிவாக இந்த புதிய ரயில் மார்க்கம் அமைக்கப்பட்டுள்ளது. பையப்பனஹள்ளி மற்றும் கே ஆர் புரம் இடையேயான 1.54 கிலோ மீட்டர் நீள ரயில் பாதை பல்வேறு காரணங்களால் தாமதமானது. தற்போது நிலுவையில் உள்ள இப்பணிகளை பூர்த்தி செய்ய பி எம் ஆர் சி எல் ஊழியர்கள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர். இந்த மார்க்கத்தில் உள்ள 12 ரயில்வே நிலையங்களை தூய்மைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளும் தற்போது துரித கதியில் நடந்து வருகின்றன. இந்த ரயில் மார்க்கம் துவங்கப்பட்டபின்னர் கே ஆர் புறத்திலிருந்து வொயிட் பீல்டு வரை 12 நிமிட காலகட்டத்திற்கு ஒன்று என ஐந்து ரயில்கள் விடப்படும். வெறும் 25 நிமிடங்கள் மட்டுமே கொண்ட இந்த பயணத்திற்கு 35 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே வேலையில் பி எம் டி சி யம் பையப்பனஹள்ளி முதல் கே ஆர் புரம் வரை இணைப்பு பஸ்களை இயக்க ஒப்புக்கொண்டுள்ளது.