
பெங்களூர்: பிப்ரவரி . 22 – கே ஆர் புரம் முதல் ஒயிட் பீல்டு வரையிலான 12. 75 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டத்தை இன்று மெட்ரோ ரயில்வேயின் தெற்கு பிரிவு பாதுகாப்பு ஆணையர் ஏ கே ராய் துவக்கிவைக்க உள்ளார். இந்த பாதியின் மெட்ரோ போக்குவரத்து தொடர்புக்கு இந்த பரிசோதனைகள் மிகவும் முக்கியமானதாகும் . இந்த சோதனை ஓட்டங்களின் போது பொது வசதிகள் , தொழில்நுட்ப , மின்சார மற்றும் சிக்னல் ஆகிய அனைத்து தொழில் நுட்பங்கள் குறித்து பரிசீலிக்கப்படும். இவை அனைத்தும் சரியாக உள்ள நிலையில் இன்னும் ஓரிரண்டு நாட்களுக்குள் இதற்கான ஒப்புதல் அளிக்கப்படும். ஆனால் இந்த எற்பாடுகளில் ஏதாகிலும் தவறிருந்து அவற்றை சரி செய்ய பரிந்துரைத்தால் அவற்றை சீர் செய்து ஒப்புதல் பெற மேலும் 10 நாட்கள் நீடிக்கும். மொத்தத்தில் இன்னும் 15 நாடுகளுக்குள் இந்த ரயில் ஓட்டம் துவங்க வாய்ப்புள்ளது . தற்போதைய சோதனை ஓட்டங்கள் போது மொத்தம் ஐந்து ரயில்கள் நேர் பாதையில் மணிக்கு 90 கிலோ மீட்டர் மற்றும் வளைவுகளில் 80 கீழே மீட்டர் வேகத்தில் நடந்து வருகிறது. பொது மக்கள் பயன் பாட்டிற்கு இந்த மார்க்கம் திறக்கப்பட்ட பின்னர் கே ஆர் புறம் முதல் வொயிட் பீல்டு நரகத்தில் ஏழு ரயில்களைபுழக்கத்தில் விட மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 15.25 கிலோ மீட்டர் நீளம் கொண்ட பையப்பனஹள்ளி முதல் வொயிட் பீல்டு வரையிலான ஊதா மெட்ரோ ரயிலின் விரிவாக்கமாக கே ஆர் புறத்திரலிருந்து வொயிட் பீல்டுக்கு தற்போது இந்த புதிய மெட்ரோ ரயில் மார்க்கம் உருவாக்கப்பட்டுள்ளது.இந்த மார்க்கம் பொது மக்களுக்கு திறக்கப்பட்டால் நகரின் கிழக்கு பகுதி வாழ் பெரும்பாலானோருக்கு மிகவும் வசதியாகி இதனால் சாலையில் வாகன நெரிசல் குறைவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.