கைதான தீவிரவாதியிடம் தீவிர விசாரணை

தாவணகெரே : ஜூன். 8 – ஜம்மு காஷ்மீர் போலிஸாரால் நகரில் கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி குறித்து மாநில போலீசார் தனி விசாரனை நடத்திவருவதாக மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்துள்ளார். தாவணகெரேவில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசுகையில் பயங்கரவாதிக்கு பெங்களூரில் அடைக்கலம் கொடுத்தவர் யார் , அவனுக்கு யார் ஆதரவாக உள்ளனர், ஆகியவைகள் குறித்து மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கல்வி துறை அமைச்சர் நாகேஷ் வீட்டு எதிரில் நடந்துள்ள போராட்டம் ஜனநாயக ரீதியில் நடந்ததல்ல. இந்த விவகாரத்தில் ஈடுபட்டவர்கள் மாணவர்களும் அல்ல . அன்று நடந்த இந்த போராட்டத்தில் தீப்தூருவை சேர்ந்த ஒருவனை விடுத்து உள்ளூர் வாசிகள் எவரும் பங்கு கொள்ளவில்லை. பெங்களூர், ஹாசன் மற்றும் தாவணகெரே உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த என் எஸ் யு ஐ தொண்டர்கள் அந்த போராட்டத்தில் பங்கு கொண்டிருந்தனர் என மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.