கைது செய்யட்டும் டி.கே. சிவகுமார் சவால்

பெங்களூர்: நவம்பர். 18 – காங்கிரஸ் ஆட்சியின் போது செலுமே நிறுவனம் வாயிலாக வாக்காளர்கள் பற்றிய விவரங்கள் சேகரிப்பு மோசடிகள் நடந்திருந்தால் எங்களை கைது செய்யட்டும். எங்கள் ஆட்சி காலத்தில் எந்த அதிகாரி , அல்லது அமைச்சர் இத்தகைய மோசடிகளுக்கு வாய்ப்புகள் அளித்தார் என்பதை பற்றி எனக்கு தெரியாது. இது மிக தீவிர குற்றச்சாட்டாக உள்ளது என மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் டி கே சிவகுமார் கூறியுள்ளார். தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தை டி வி சிக்கு ஒப்படைத்திருக்கும் நிலையில் இது உண்மையில் டி வி சி விசாரிக்கும் விஷயமல்ல . நாளை நங்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளை நேரில் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் . எனவும் சிவகுமார் தெரிவித்தார். நகரின் சதாசிவநாகரில் உள்ள தன வீட்டில் நிருபர்களிடம் சிவகுமார் கூறுகையில் செலுமே நிறுவனத்திற்கு அளிக்கப்பட்ட அனுமதி உத்தரவை கௌரவ் குப்தா திடீரென திரும்ப பெற்றுள்ளார். ஆனால் ஏற்கெனவே இந்த நிறுவனத்தின் 7 அல்லது 8 ஆயிரம் ஊழியர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்கள் குறித்த தகவல்களை சேகரித்துள்ளனர் , இவ்வாறு சிவகுமார் தெரிவித்தார்.