கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் குறித்து பரபரப்பு தகவல்கள்

பெங்களூர் : அக்டோபர் . 24 – முன்னாள் அமைச்சர் ஹெச் டி ரேவண்ணாவின் அந்தரங்க செயலாளர் அஸ்வத்தா என்பவரின் கொலை முயற்சி விவகாரமாக கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி ஐ எஸ் டி பிரிவு இன்ஸ்பெக்டர் அசோக்கிற்கு நிலத்தடி குற்றவாளிகளிடம் தொடர்பு இருக்கும் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. தற்போது கைதாகியுள்ள இன்ஸ்பெக்டர் அசோக் நிலத்தடி மோசடியாளினி பாம்பே ரவிக்கு தலைவனாக இருப்பதுடன் இயக்குனர் உமாபதி கௌடா மற்றும் தொழிலதிபர் தீபக் கௌடா ஆகியோரை கொலை செய்த முயற்சியிலும் இன்ஸ்பெக்டர் அசோக்கின் பங்கு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. உமாபதி கொலைக்கு சதி திட்டம் தீட்டிய வழக்கில் கைதான ரௌடிகளான கரியா ராஜேஷ் மற்றும் சந்ந்து ஆகியோருக்கு இன்ஸ்பெக்டர் அசோக்குடன் தொடர்பு இருந்து வந்துள்ளது. இவர்கள் இன்ஸ்பெக்டர் அசோக்கின் பிறந்தநாளுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளனர் . பாம்பே ரவி மற்றும் அவனுடைய கூட்டாளிகள் வாயிலாக இன்ஸ்பெக்டர் அசோக் ஹப்தா மிரட்டல் மற்றும் வட்டி விவகாரங்கள் நடத்தி வந்ததாகவும் தெரியவந்துள்ளது. ஹெச் டி ரேவண்ணாவின் உதவியாளர் கொலை தொடர்பாகவும் நடந்த சூழ்ச்சியில் கொலை நடக்கவேண்டிய இடம் உட்பட பல்வேறு விஷயத்திலும் இன்ஸ்பெக்டர் அசோக் தலையிட்டுள்ளார் . இதற்கு முன்னர் நகரின் சி சி பி துறையில் சப் இன்ஸ்பெக்டராக இருந்தபோது குற்றவாளிகளின் தொடர்பை வைத்து கொண்டு சமூக குற்ற செயல்களில் அசோக் ஈடுபட்டு வந்துள்ளார். என்ற குற்றச்சாட்டும் தற்போது இவருக்கு எதிராக எழுந்துள்ள நிலையில் அனைத்து கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வரும் போலீஸ் துறைக்கு இவருக்கு எதிரான பல குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. முன்னாள் அமைச்சர் ஹெச் டி ரேவண்ணாவின் செயலாளர் அஸ்வத் கொலை முயர்ச்சி வழக்கு தொடர்பாக ஏற்கெனவே ஆறு குற்றவாளிகளை ஹொளேனராசிபுரா போலீசார் கைது செய்துள்ளனர். கோலார் ஐ எஸ் டி பிரிவு இன்ஸ்பெக்டர் அசோக் சதீஷ் , தேஜஸ்வி , முருகன் , மதுசூதன் , அசோக் மற்றும் அரவிந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள். குற்றவாளிகளுக்கு உதவி செய்த விஷயமாக கோலார் ஐ எஸ் டி இன்ஸ்பெக்டர் அசோக் கைது செய்யப்படுள்ளார் . முன்னாள் அமைச்சர் ஹெச் டி ரேவண்ணனாவின் செயலாளர் மற்றும் குத்தகையாளர் அஸ்வத் மீது கடந்த அக்டோபர் 10 அன்று ஹொளேநரசீபுரா தாலூகாவின் சூரனஹள்ளி கிராமத்தின் அருகில் ஆயுதங்களால் தாக்குதல் நடந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அஸ்வத் மயிரிழையில் உயிர்தப்பித்துளார். இது குறித்து சென்னராயப்பட்டானா போலீஸ் நிலையத்தில் அஸ்வத் அளித்த புகாரின் மீது தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.