கைவிடப்பட்ட‌ வாகனங்களை அப்புறப்படுத்திய‌ போக்குவரத்து போலீசார்

Oplus_131072

பெங்களூரு, ஏப். 18: பெங்களூரு போக்குவரத்துக் காவல் நிலையங்களில் நிறுவப்பட்ட சிறப்புக் குழுக்கள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் கைவிடப்பட்ட 1,412 வாகனங்கள் அடையாளம் காணப்பட்ட‌ன. அதில் சிறப்பு நடவடிக்கையாக‌ 918 வாகனங்களை அப்புறப்படுத்தினர்.
இந்த வாகனங்கள் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பாதசாரிகளின் நடமாட்டத்திற்கு இடையூறாகவும், மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து சாலையின் இடத்தை அடைத்துக் கொண்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்
வாகனங்களைத் தாங்கள் கண்டுபிடிக்கக்கூடிய உரிமையாளர்களிடம் ஒப்படைத்ததாக போக்குவரத்துப் போலீசாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிமையாளர்களை அடையாளம் காணமுடியாத‌ வாகனங்களை நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பிறகு பொது ஏலத்திற்கு காவல்துறை ஏற்பாடு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட 706 ஆட்டோக்கள், 521 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 93 இலகுரக சரக்கு வாகனங்கள். இவற்றில் 350 ஆட்டோக்கள், 449 இருசக்கர வாகனங்கள், 68 இலகுரக சரக்கு வாகனங்கள் உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன. கைவிடப்பட்ட வாகனங்களில் நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் கனரக சரக்கு வாகனங்களும் அடங்கும்.
இணை ஆணையர் (போக்குவரத்து) எம்.என்.அனுசேத் கூறுகையில், இந்த வாகனங்களில் பெரும்பாலானவை 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்டவை மற்றும் நீண்ட காலமாக பயன்பாட்டில் இல்லை. “சிவாஜிநகர் மற்றும் ஆர்டி நகர் பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் கைவிடப்பட்ட வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு அகற்றப்பட்டன” என்றார்.