
கொச்சி,மார்ச்.11-
கேரளாவின் கொச்சி நகரின் பிரம்மபுரம் பகுதியில் உள்ள கழிவு மேலாண்மை ஆலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு ஒரு வாரம் ஆன பிறகும் நகரம் நச்சு புகை மண்டலமாகவே காணப்படுகிறது
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த போதிலும், அடர்த்தியான, கரும் புகை சுற்றியுள்ள பகுதிகளுக்குள் ஊடுருவி நகரத்தை மூடி உள்ளது.
பிளாஸ்டிக், உலோகம் மற்றும் எரிக்கப்பட்ட பொருட்களின் புகை நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளை நோக்கி மிதப்பதால், சுவாசிப்பதில் சிரமம் இருப்பதாக குடியிருப்பாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். கண்கள் மற்றும் தொண்டையில் எரியும் உணர்வு இருப்பதாக பலர் தெரிவித்துள்ளனர்.
[கேரள மாநிலம், கொச்சியின் பிரம்மபுரம் பகுதியில் அமைந்துள்ள கழிவு ஆலையில் ஏற்பட்டுள்ள தீ விபத்திலிருந்து கிளம்பியுள்ள நச்சுப்புகை அந்நகரின் பல பகுதிகளை சூழ்ந்துள்ளது. மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த பகுதி மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்இங்குஉள்ளூர் கழிவு மேலாண்மை ஆலையில், கடந்த வாரம் ஏற்பட்ட தீ ஏற்பட்டது. பல நாட்களாக போராடி தீயணைக்கப்பட்டது
அந்த பகுதியில் வசித்து வரும் உள்ளூர் மக்கள், வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றனர். ஒருவேளை அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரும்பட்சத்தில் கட்டாயம் மாஸ்க் அணிந்து வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த தீ விபத்தினால் ஏற்பட்டுள்ள நச்சுப் புகை கட்டுக்குள் வரும் வரை, குழந்தைகளின் நலனைக் கருதி அந்த பகுதியில் உள்ள பள்ளிகளை திறக்க வேண்டாமென உள்ளூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று கிடைத்த தகவலின்படி, தீ விபத்து ஏற்பட்டது இந்தியாவில் உள்ள பல கழிவு மேலாண்மை ஆலைகளில் இதுபோன்ற தீ விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன. பெரும்பாலும் குப்பை கிடங்குகளில் தேங்கி கிடக்கும் குப்பைகள் மக்கும்போது, உருவாகும் மீத்தேன் வாயுக்கள் இது போன்ற தீ விபத்துகளை ஏற்படுத்துகிறது