
பாகல்கோட், மார்ச் 15-
கொடுத்த கடனை நண்பர்கள் திருப்பித் தராததால் கால்நடை மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் ஜமகண்டி தாலுகா கன்கன்வாடி கிராமத்தில் நடந்துள்ளது.
கால்நடை மருத்துவர் பெயர் நந்தப்பா பாகேவாடி.
பனஹட்டி தாலுகாவில் உள்ள ஹிப்பராகி பகுதியைச் சேர்ந்த இவர் தனது சக ஊழியர் ஒருவரான கால்நடை மருத்துவரிடம் ரூ.5 லட்சமும், மற்றொரு நண்பருக்கு ரூ.7 லட்சமும் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் கடனை திருப்பி செலுத்தவில்லை பலமுறை கேட்டும் அவர்கள் கொடுக்கவில்லை இதனால் மனம் வருந்தி மன உளைச்சலில் இருந்த இவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பு இது தொடர்பாக இவர் கடிதம் எழுதி வைத்துள்ளார் இதை கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.