கொடூர கொலை

பெங்களூர் : மார்ச் . 2 – சாதாரண காரணத்தால் ஏற்பட்ட கலாட்டாவில் பார் கேஷியர் தலைமீது கல்லால் தாக்கி கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் ஆர் எம் சி யார்டு பகுதியின் கோரேகுண்டேபாள்யா அருகில் நேற்று இரவு நடந்துள்ளது. கோரிகுண்டெபால்யா அருகில் உள்ள சபலம்மா கோயில் பக்கத்தில் உள்ள சேகர் பாரின் கேஷியர் சிவகுமார் என்ற ஜோகி (42) கொலையுண்டவர் என டி சி பி தேவராஜ் தெரிவித்தார். இந்த கொலையை செய்த லாரியில் சரக்குகளை ஏற்றி இறக்கும் தொழில் செய்து வந்த கூலி தொழிலாளி கோரிகுண்டெபால்யாவை சேர்ந்த கர்ணா என்ற சிதூரி ராவ் மற்றும் கிரிஷ் ஆகிய இருவரையும் கொலை நடந்த சிலவே மணி நேரங்களில் போலீசார் கைது செய்துள்ளதாக டி சி பி தெரிவித்தார். சேகர் பாரில் இரவு 10 மணியளவில் குற்றவாளிகள் மது அருந்த வந்திருந்தனர். அப்போது கேஷியருடன் இவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதுவே பின்னர் தீவிரமடைந்து கர்ணா மற்றும் கிரிஷ் இருவரும் சேர்ந்து கேஷியர் தலை மீது கல்லை தூக்கிப்போட்டு தப்பியோடியுள்ளனர். தகவல் அறிந்த உடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆர் எம் சி யார்டு போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி பிடித்து கைது செய்துள்ளதாக டி சி பி தேவராஜ் தெரிவித்தார்.