கொடைக்கானல் கோடை விழா

கொடைக்கானல்: மே 26-
கொடைக்கானலில் கோடை விழா மற்றும் 60-வது மலர்க் கண்காட்சி இன்று காலை தொடங்குகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை மற்றும் தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை சார்பில் கோடை விழா மற்றும் 60-வது மலர்க் கண்காட்சி இன்று (மே 26) காலை 11 மணிக்கு தொடங்குகிறது.
தொடக்க விழாவில் அமைச்சர்கள் இ.பெரியசாமி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கா.ராமச்சந்திரன், அர.சக்கரபாணி. ஆட்சியர் பூங்கொடி பங்கேற்கின்றனர். இன்று தொடங்கி மே 28 வரை நடக்கும் மலர்க் கண்காட்சி மற்றும் ஜூன் 2 வரை நடக்க உள்ள கோடை விழாவில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளன.
மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் இருந்து கூடுதலாக அரசுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, வெளிமாவட்டங்களில் இருந்து போலீஸார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.