
பெங்களூர், ஜன.7-
கொதிக்கும் வெண்ணீரில் தவறி விழுந்த நான்கு வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் பற்றி தெரிய வந்திருப்பதாவது:
பெங்களூரில் கெங்கேரி அருகே உள்ளது ஒசப்பாளையா. இங்கு வசித்து வருபவர் பயாஸ் பாஷா – தாட்சியாயினி. இத்தம்பதியருக்கு ஒரே மகள்
சிறுமி குல்னாஸ் (4)
பயாஸ் பாஷா, மைசூர் மாவட்டம் ,ரங்கசமுத்ராவை சேர்ந்தவர். தற்போது கெங்கேரி அருகே உள்ள ஒசபாளையாவில் தங்கி வசித்து வருகிறார்.
இவரின் ஒரே மகளான குல்னாஸ் நேற்று காலை 9:30 மணிக்கு பாத்ரூம் சென்று இருக்கிறார் .அங்கு பக்கிட்டில் கொதிக்கும் வெண்ணீர் இருந்துள்ளது.
குல்னாஸ்
கால் தவறி பக்கிட்டில் விழுந்துள்ளார். கொதிக்கும் நீர் உடலில் பட்டவுடன் சிறுமி வலி தாங்க முடியாமல் கூச்சலிட்டுள்ளார்.உடனே பெற்றோர் ஓடி வந்து குழந்தையை தூக்கிக் கொண்டு சிகிச்சைக்காக பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.அங்கு முதலுதவி செய்து பின்னர் விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆயினும் காலை 11:45 மணிக்கு சிறுமி உயிர் இழந்தார்.இது குறித்து கும்பலக்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.