கொரிய தீபகற்பத்தில் பதட்டம்

தென்கொரியா மார்ச் 19- தென்கொரியா- அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொண்டன.
வடகொரியா தென்கொரியா நாடுகளின் நீண்டநாள் மோதலால் கொரிய தீபகற்பத்தில் எப்போதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. தென்கொரியாவுக்கு ஆதரவாக உள்ள அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் இணைந்து கூட்டு ராணுவ போர் பயிற்சிகளை நடத்துவது, தென்கொரியாவில் அமெரிக்காவின் குண்டு வீசும் விமானங்கள், அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் போன்ற சக்தி வாய்ந்த ராணுவ தளவாடங்கள் நிறுத்தி வைப்பு போன்ற நடவடிக்கைகள் வடகொரியாவை எரிச்சலடைய வைத்துள்ளது.இதனால் வடகொரியா குறுகிய ஏவுகணை சோதனை, கண்டம் விட்டு கண்டம் தாவும் நீண்டதூர ஏவுகணை சோதனை, நீருக்கடியில் கதிரியக்க சுனாமிகளை உருவாக்கி அணு ஆயுத இலக்குகளை அழிக்கும் புதிய டிரோன் சோதனைகளை செய்து வருகிறது. அந்த வகையில் வடகொரியா, இன்று காலை கிழக்கு கடற்கரையில் குறுகிய தூரம் சென்று தாக்கி அழிக்கும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தி சோதனை நடத்தியுள்ளது. இன்று காலை 7.44 மணிக்கு இரண்டு ஏவுகணைகளை ஒரே நேரத்தில் சோதனை நடத்திய நிலையில், 37 நிமிடங்கள் கழித்து மேலும் ஒரு ஏவுகணை சோதனை நடத்தியதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.