கொரோனாவில் இருந்து அமைச்சர் சுதாகர் குணம்

பெங்களூர் : ஜூன். 7 – மருத்துவ கல்வி மற்றும் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் சுதாகர் என்னுடைய கொரோனா ஆர் டி பி சி அறிக்கை நெகடிவ் என வந்திருப்பதால் நான் இன்று முதல் முதல் போலவே சுறு சுறுப்பாக பணியாற்றுவதில் ஈடுபடுவேன் , உங்களின் அன்பு , வாழ்த்துக்களுக்கு நான் கடமைப்பட்டவன் என தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பாதித்துள்ளது என்பதை அறிந்த உடனேயே சுதாகர் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். மூன்று கொரோனா அலைகளிலிருந்தும் எப்படியோ தப்பித்து வந்த சுகாதாரம் மற்றும் குடும்ப நல துறை அமைச்சர் சுதாகருக்கு கடந்த வியாழக்கிழமை கொரோனா பாசிட்டிவ் என உறுதியானது . சிறிதளவே காய்ச்சல் கண்டிருந்த நிலையில் கொரோனா சோதனை செய்த போது பாசிட்டிவ் என தெரிய வந்தது. உடனே அவர் வீட்டு தலைமையில் இருந்து கொண்டே சிகிச்சை பெற்று தற்போது முழு குணமடைந்துள்ளார்.