கொரோனாவுக்கு பிறகு ஆரஞ்சு பழத்தின் தேவை அதிகரிப்பு

திருப்பதி, ஜூலை 23-ஆரஞ்சு பழம் மிகவும் சுவையான மற்றும் பிரபலமான ஒரு சிட்ரிக் பழமாகும். இதில் நல்ல அளவில் வைட்டமின் சி உள்ளது. ஆரஞ்சு ஆன்ட்டி ஆக்ஸிடேன்டுகளைக் கொண்டுள்ளது. இவை நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகின்றன. ஆந்திராவில் கொரோனா தொற்றுநோயின் உச்சக்கட்டத்தின் போது ஆரஞ்சு சாறுக்கு அதிக தேவை இருந்தது. பாபட்லாவில் உள்ள வேளாண்மைக் கல்லூரியில் வேளாண் பொருளாதாரப் பேராசிரியரான நிர்மல் ரவி குமார் நடத்திய ஆய்வில், கோவிட் நோய்க்குப் பிந்தைய சூழ்நிலையில் ஆரஞ்சு பழத்திற்கான தேவை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.