கொரோனாவை கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு: பியூஷ்


புதுடில்லி, ஏப். 19- கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது மாநில அரசுகளின் பொறுப்பு என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
தினமும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய அரசு உதவிட வேண்டும் என சில மாநில முதல்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது:
மாநில அரசுகள் மருத்துவ ஆக்ஸிஜன்களுக்கான தேவையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஆக்ஸிஜன் தேவையை கையாள்வது எவ்வளவு முக்கியமோ அதனை முறையாக விநியோகிப்பதும் அவ்வளவு முக்கியமானது. கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு, அந்த பொறுப்பை அவர்கள் நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.