கொரோனா அபாயம் இன்னும் நீங்கவில்லை சுருதிஹாசன்

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்குகளை அமல்படுத்தியும் அடங்கவில்லை. வேறு வழியின்றி தளர்வுகள் அறிவித்து சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் முக கவசம் அணியவும் அரசு கட்டாயப்படுத்தி வருகிறது.
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்குகளை அமல்படுத்தியும் அடங்கவில்லை. வேறு வழியின்றி தளர்வுகள் அறிவித்து சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் முக கவசம் அணியவும் அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. இதனை பலர் பொருட்படுத்தவில்லை என்றும், பாதிக்கும் மேற்பட்டோர் முக கவசம் அணியாமல் திரிவதும் கூட்டமாக கூடுவதுமாக இருக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இதனால் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமாகலாம் என்ற அச்சம் உள்ளது.
இதுகுறித்து நடிகை சுருதிஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கொரோனா வைரஸ் அனைவரின் ஆரோக்கியத்திலும் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. கொரோனா அபாயம் முடிந்து விடவில்லை. கொரோனா பரவலை தடுக்க விதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன. அதனை பின்பற்றாவிட்டால் ஒரு தனிநபராகவோ, நடிகையாகவோ எனது ஆரோக்கியத்திலும் பாதுகாப்பிலும் முன்னுரிமை அளிப்பதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. இதனை எனது கருத்தாக தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.