கொரோனா: அலட்சியம் கூடாது

பெங்களூரு, ஜூன் 10- மாநிலத்தில் கொரோனா தொற்று சமீப நாட்களாக இறங்கு முகமாய் இருந்தாலும் சில மாவட்டங்களில் தொற்று கட்டுக்குள் வராத நிலையில் முதல்வர் எடியூரப்பா தொற்று அதிகரித்துள்ள மாவட்ட அதிகாரிகளுடன் வீடியோ கானபரென்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்தி தொற்றை கட்டுப்படுத்த ஏற்கெனவே உள்ள நியமங்களை இன்னும் கடுமையாக பின்பற்ற வேண்டும் என்பதுடன் இதில் எவ்வித அலட்சிய போக்கு இருக்க கூடாது என்றும் எச்சரித்துள்ளர். நகர பகுதிகளில் தொற்று இறங்கு முகமாக உள்ளது. ஆனால் கிராமாந்தர பகுதிகளில் இது அதிகரித்து வருகிறது . இது மிகவும் கவலை தரும் விஷயமாகும். அதனால் கிராமத்தர பகுதிகளில் தொற்றை கட்டு படுத்துவதில் அதிகம் கவனம் செலுத்துங்கள். கொரோனா சோதனைகளை அதிகரிக்கவும் . தவிர தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக கொரோனா சிறப்பு சேவை மையங்களில் சேர்க்கவும் முதல்வர் அதிகாரிகளிடம் வற்புறுத்தியுள்ளார். கிராமாந்திர பகுதிகளில் பலரும் கொரோனா சோதனைக்கு உட்பட முன்வருவதில் தயக்கம் காட்டுவது குறித்து அரசுக்கு தகவல்கள் வந்துள்ளது. எனவே ஊழியர்கள் வீடு வீடாக சென்று சோதனை நடத்தினால் தொற்றை பெருமளவில் குறைக்க முடியும் என்றும் முதல்வர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். தொற்றால் பாதித்தோரை கண்டு பிடிக்கும் பணி வேகமாக நடக்க வேண்டும். தவறினால் தொற்றை கட்டுப்படுத்துவது கஷ்டமாகிவிடும். எனவே தற்போதய செயல் முறைகளை மாற்றி கொண்டு மிகவும் வேகமாக தொற்றாளர்களை கண்டு பிடித்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் நம் செயல் திட்டங்கள் வேகமாக வேண்டும். தொற்றுக்கு பாதிப்புள்ளாகியுள்ள மாவட்டங்களான மைசூரு , ஹாசன் , துமகூரு , சிவமொக்க , தக்ஷிண கன்னடா , மண்டியா , பெலகாவி , மற்றும் சிக்கமகளூரு மாவட்ட ஆட்சியாளர்கள் பஞ்சாயத்து சி இ ஓ க்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ,சுகாதார அதிகாரிகள் முதல்வருடனான இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். நகர பகுதிகளுடன் ஒப்பிட்டால் கிராம பகுதிகளில் தொற்று அதிகரித்து உள்ளது. மாநிலத்தின் 22 மாவட்டங்களில் க்ராமந்தர பகுதிகளில் தொற்று அதிகரித்துள்ளது. கடந்த மே 25 முதல் ஜூன் 8 வரையிலான காலகட்டத்தில் மாநிலத்தில் 50 முதல் 85 சதவிகிதம் வரையிலான தொற்றுக்கள் வெறும் கிராமத்தார பகுதிகளில் பதிவாகியுள்ளன. இதில் ஹாசன் மாவட்டத்தில் மட்டுமே மிக அதிக அளவில் 10,100 பேருக்கு தொற்று கண்டுள்ளது. இதே கால கட்டத்தில் நகர் பகுதியில் வெறும் 3368 பேருக்கு மட்டுமே தொற்று கண்டுள்ளது. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.